OUR CLIENTS
மீன்களே இல்லாத கண்காட்சியகம் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
மீன்களே இல்லாத கண்காட்சியகம் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்! Posted on 12-Dec-2018 மீன்களே இல்லாத கண்காட்சியகம் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

பென்னாகரம், டிச.12-

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அருவியில் குளித்தும், காவிரியாற்றில் பரிசல் பயணம் மேற்கொண்டும் பயணிகள் மகிழ்கின்றனர். 
இந்நிலையில் சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2007- 2008ல், தமிழக மீன் வளத்துறையின் சார்பாக வண்ண மீன் கண்காட்சியகம், 32 லட்சம் ரூபாய் மதிப்பில் கொண்டு வரப்பட்டது. வண்ண மீன் கண்காட்சியகத்துக்கு உள்ளே செல்ல ஒரு நபருக்கு ஐந்து ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. தற்போது மீன் கண்காட்சி யகத்தில் குறைந்தளவே மீன்கள் உள்ளன. ஏராளமான தொட்டிகள் காலியாக உள்ளதுடன் சுத்தமின்றி துர்நாற்றம் வீசுகிறது. 
கண்காட்சியகம் மூலம் பணம் வசூலிப்பதில் மட்டும் குறியாக உள்ள ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மீன்களை பராமரிக்கவும் புதிய மீன்களை வாங்குவதிலும் ஆர்வம் காட்டுவதில்லை. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். ஆகவே புதிய மீன்களை பார்வைக்கு வைக்கவும், கண்காட்சிய கத்தை புதுப்பொலி வாக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label