OUR CLIENTS
கால்வாய் சீரமைக்கப்படுமா?
கால்வாய் சீரமைக்கப்படுமா? Posted on 12-Dec-2018 கால்வாய் சீரமைக்கப்படுமா?

செஞ்சி, டிச.12-
அவலூர் பேட்டையில் கடந்த இரண்டு மாதங்களாக உடைந்த கழிவு நீர் கால்வாயை சீரமைத்திட ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காண்பித்து வருகின்றனர்.
மேல்மலையனூர் தாலுகா அவலூர்பேட்டையில் பழைய போஸ்ட் ஆபீஸ் அருகிலுள்ள தெருக்கால்வாய் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத கார் மோதி சேதமடைந்தது. இதனால் கால்வாயில் கருங்கற்கள் சிதறி விழுந்தன. பின், ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் கருங்கற்களை மட்டும் அப்புறப் படுத்திச் சென்றனர். 
ஆனால், இதுவரை கால்வாய் சீரமைக்கப் படவில்லை. இவ்வழியாக தொடக்கப் பள்ளிக்கு நடந்து செல்லும் சிறுவர்கள் தடுக்கி விழுகின்றனர். எனவே, போக்குவரத்துக்கு சிரமமாக உள்ள கருங்கற்களை அப்புறப் படுத்தி, சேதமடைந்த கழிவு நீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Label