OUR CLIENTS
மக்கள் தீர்ப்பு இது புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் தேர்தல் முடிவு குறித்து கமல் கருத்து
மக்கள் தீர்ப்பு இது புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் தேர்தல் முடிவு குறித்து கமல் கருத்து Posted on 12-Dec-2018 மக்கள் தீர்ப்பு இது புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் தேர்தல் முடிவு குறித்து கமல் கருத்து

சென்னை, டிச.12-

புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம் என, 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் எண்ணப்பட்டது. இதில், பாஜக ஆளும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது. தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி அமைக்கிறது. மிசோரமில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ராஜஸ்தானில் ஆளும் பாஜகவை தோற்கடித்து அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது" என, பதிவிட்டுள்ளார்.

Label