OUR CLIENTS
விஏஓ வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்
விஏஓ வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல் Posted on 12-Dec-2018 விஏஓ வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தல்

சென்னை, டிச.12-

கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் நேற்று விடுத்துள்ள அறிக்கையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 கோரிக்கைகளை முன்வைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கி யுள்ளனர். அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர  தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசு நிர்வாகத்தின் அச்சாணிகள் என்பது கிராம நிர்வாக அலுவலர்கள் தான். படிக்கும் மாணவர்களில் தொடங்கி உழவர்கள் வரை அனைவருக்கும் அனைத்து வகையான சான்றிதழ் களையும் வழங்குபவர்கள் அவர்கள் தான். இயற்கை சீற்றத்தால் பாதிப்பு ஏற்பட்டாலும், நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக இருந்தாலும் முதலில் களத்தில் இறங்கி பாடுபடுவது கிராம நிர்வாக அலுவலர்கள் தான்.
கிராம நிர்வாக அலுவலர்கள் முன்வைத் துள்ள கோரிக்கைகளில் பெரும் பாலானவை நியாய மானவையே. அதுமட்டுமின்றி, அந்தக் கோரிக் கைகளில் பெரும்பான்மை யானவை நிர்வாகம் சார்ந்தவை தானே தவிர, பொருளாதாரமோ, நிதியோ சார்ந்தவையல்ல. ஆனால், அதைக் கூட செய்வதற்கு இந்த அரசுக்கு மனம் வரவில்லை. அதுமட்டுமின்றி, பணி செய்யும் இடங்களிலேயே கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றுவதாக பல மாதங்களுக்கு முன்பே வாக்குறுதி அளித்திருந்த தமிழக ஆட்சியாளர்கள், அதை நிறைவேற்றத் தவறியதன் விளைவாகவே கிராம நிர்வாக அலுவலர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் செய்யும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர் களின் போராட்டத்தால் வருவாய்த்துறை பணிகள் முடங்கியிருக் கின்றன. நவம்பர் 28-ம் தேதியிலிருந்தே கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களின் பணிகளை படிப் படியாகக் குறைத்துக் கொண்டனர். அதுமட்டுமின்றி, இப்போதும் அடுத்தடுத்து மூன்று கட்ட போராட்டங்களை நடத்த வுள்ளனர். அவர்களின் போராட்டங் களால் மாணவர்கள் முதல் விவசாயிகள் வரை அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப் பட்டுள்ளனர். மாணவர் களுக்குத் தேவையான சான்றிதழ்களைப் பெறுதல், நில அளவீடுகள், உழவர்கள் தீர்வை செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து வகையானப் பணிகளும் பாதிக்கப் பட்டிருக்கின்றன. இதே நிலை நீடித்தல் அரசு எந்திரத்தின் அடித்தட்டு நிர்வாகம் முற்றிலுமாக செயலிழக்கும் ஆபத்து உள்ளது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டியது தமிழக அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும்.
எனவே, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்களை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும். அவர்களின் கோரிக்கைகளில் சாத்தியமான வற்றை நிறைவேற்றி, கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Label