OUR CLIENTS
கவுரி சங்கர், கல்புர்கி உள்ளிட்ட 4 கொலை வழக்குகளையும் சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது உச்சநீதிமன்றம்
கவுரி சங்கர், கல்புர்கி உள்ளிட்ட 4 கொலை வழக்குகளையும் சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது உச்சநீதிமன்றம் Posted on 12-Dec-2018 கவுரி சங்கர், கல்புர்கி உள்ளிட்ட 4 கொலை வழக்குகளையும் சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி, டிச.12-

சமூக ஆர்வலர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, பத்திரிகையாளர் கவுரி சங்கர் மற்றும் எம்.எம். கல்புர்கி ஆகியோரின் கொலை வழக்குகளில் பொதுவான இணைப்பு இருக்கும் பட்சத்தில் 4 வழக்குகளையும் ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் நேற்று கேள்வி எழுப்பியது.
இது குறித்து வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் சிபிஐ பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டது. பகுத்தறிவுவாதியான நரேந்திர தபோல்கர் கடந்த 2013ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். பிரபல எழுத்தாளரும் சாகித்திய அகாதமி விருது பெற்றவருகான எம்.ஏ.கல்புர்கி கடந்த 2015ம் ஆண்டு கொல்லப்பட்டார். அதே ஆண்டு சமூக ஆர்வலரான கோவிந்த் பன்சாரேவும் கொலை செய்யப்பட்டார். அதன்பின் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் 2017ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் இவ்வாறு கொல்லப்பட்டது நாட்டில் பலரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரான செயல் என்று பல தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இந்த 4 வழக்குகளும் தனித்தனியே விசாரிக்கப்பட்டு வருகின்றன. கவுரி லங்கேஷ் மற்றும் கல்புர்கியின் வழக்குகளை கர்நாடக காவல்துறை விசாரித்து வருகிறது. கோவிந்த் பன்சாரேவின் வழக்கை மகாராஷ்டிர காவல்துறை விசாரித்து வருகிறது. நரேந்திர தாபோல்கரின் வழக்கை மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு படி சிபிஐ விசாரணை செய்து வருகிறது.
இந்நிலையில் எம்.ஏ. கல்புர்கியின் மனைவி தன் கணவரின் கொலைக்கும் சமூக ஆர்வலர்கள் நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்தராவ் பன்சாரேவின் கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகள் யூ.யூ. லலித் மற்றும் நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன் இந்த மனு தொடர்பாக நேற்று விசாரணை நடைபெற்றது.
விசாரணையின் போது கர்நாடக காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மற்றும் எம்.ஏ கல்புர்கி கொலை வழக்குகளில் தொடர்பு இருப்பதாக தெரிவித்தனர். மேலும் கல்புர்கி கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை மூன்று மாதங்களில் தாக்கல் செய்வதாக கர்நாடக காவல்துறை தெரிவித்தது. கடந்த நவம்பர் 26ம் தேதி கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷின் கொலை வழக்கில் கர்நாடக அரசு மெத்தனம் காட்டுவதாக உச்சநீதிமன்றம் கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
வழக்கு விசாரணை முடிவில் 4 பேரின் கொலைக்கும் பொதுவான இணைப்பு இருப்பது தெரியவந்தால் அனைத்து வழக்குகளையும் ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது குறித்து ஜனவரி முதல் வாரத்திற்குள் சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Label