OUR CLIENTS
ஆதார் பதிவால் பட்டா மாறுதலில் புதிய சிக்கல்-நில உரிமையாளர் கடும் அதிர்ச்சி!
ஆதார் பதிவால் பட்டா மாறுதலில் புதிய சிக்கல்-நில உரிமையாளர் கடும் அதிர்ச்சி! Posted on 13-Dec-2018 ஆதார் பதிவால் பட்டா மாறுதலில் புதிய சிக்கல்-நில உரிமையாளர் கடும் அதிர்ச்சி!

சென்னை, டிச.13-

தமிழக அரசு மின்னாளுமை திட்டத்தை செயல்படுத்திய பிறகு, பொதுமக்களுக்கான வருவாய்த்துறை சேவைகள், பொது 'இ-சேவை' மையங்களிலேயே கிடைக்கிறது. பட்டா மாறுதல், வருமானச்சான்று உட்பட, 20 வகையான வருவாய்த்துறை சேவைகள், 'இ-சேவை' மையங்களில் கிடைக்கிறது.பட்டா மாறுதல் செய்ய, கிரைய பத்திரம், மூலப்பத்திரம், வில்லங்கம், சிட்டா - அடங்கல் விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
முன்னதாக, பொது சேவை மையத்தில் வழங்கும், படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். படிவத்தில், உரிமையாளர், முகவரி, சொத்தின் விவரங்கள் கேட்கப்படுகிறது.குறிப்பாக, உரிமையாளரின் ஆதார் எண், ஜாதி, மதம் போன்ற தேவையில்லாத விவரங்களும் கேட்கப்படுகிறது. ஆதார் எண்ணை, சரிபார்க்காமல் பதிவு செய்வதால், புதிய பிரச்னைகள் முளைத்துள்ளது.பொதுமக்கள் கூறியதாவது:ஆதார் கட்டாயமில்லை என, கோர்ட் கூறியிருந்தாலும், அரசுத்துறைகளில், ஆதார் எண் கேட்கின்றனர். பட்டா மாறுதலுக்கும், ஜாதிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.இருப்பினும், படிவத்தில் உள்ள தகவல்களை அளிக்கிறோம். ஆதார் எண்ணை தவறுதலாக கொடுத்ததாலும், தவறாக பதிவு செய்ததாலும், புதிய பிரச்னை வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட நபரின் ஆதார் எண் மாறியதால், மற்றொருவரின் ஆதார் எண்ணாக பதிவாகிவிடுகிறது. இதன்மூலம், மறுமுறை பட்டா மாறுதல் செய்யும் போது, விண்ணப்பத்தை பதிவு செய்ய முடிவதில்லை.பட்டா மாறுதலுக்கு ஆதார் எண் பதிவு தேவையில்லை என்று அறிவிக்க வேண்டும். இல்லையெனில், ஆதார் ஆதாரத்தை சரிபார்த்து, 'ஆன்லைனில்' பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.

Label