OUR CLIENTS
முஸ்லிம் மகளிர் மேம்பாட்டுக்காக 146 பெண்களுக்கு நலத்திட்ட உதவி!
முஸ்லிம் மகளிர் மேம்பாட்டுக்காக 146 பெண்களுக்கு நலத்திட்ட உதவி! Posted on 13-Dec-2018 முஸ்லிம் மகளிர் மேம்பாட்டுக்காக 146 பெண்களுக்கு நலத்திட்ட உதவி!

வாணியம்பாடி, டிச.13-

வாணியம்பாடியில் முஸ்லிம் மகளிர் மேம்பாட்டுக்காக 146 பெண்களுக்கு நலதிட்ட உதவிகளை அமைச்சர் நீலோபர் கபீல்வழங்கினார். 
வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை பிரிவு நலத்துறை மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் ஆகியோர் சார்பில் முஸ்லிம் மகளிர் நலத்திட்ட உதவிகள், டாம்கோ கடன் மற்றும் உலமாக்கள் நல வாரியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி இசுலாமியா கல்லூரி அல்லாமா இக்பால் உலரங்கத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட சிறுபாண்மை நலத்துறை அலுவலர் ஜெயப்ரகாஷ் தலைமை வகித்தார். வட்டாட்சியர் கிருஷ்ணவேணி, முஸ்லிம் மகளிர் உதவும் சங்க உறுப்பினர் சையத் நிசார் அஹமத், நகர கூட்டுறவு வங்கி இயக்குநர் ஜி.சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 முஸ்லிம் மகளிர் உதவும் சங்க செயலாளர் ஷாஹிதா நீலோபர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபீல் கலந்துக்கொண்டு முஸ்லிம் மகளிர் மேம்பாட்டுக்கான நலதிட்ட உதவியாக 146 பெண்களுக்கு ரூ.7.50 லட்சம் வழங்கினார். தொடர்ந்து சிறுபான்மையினருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து விளக்கவுரை ஆற்றினார்.
இதில் நகர கூட்டுறவு கட்டிட சங்க தலைவர் டி.முஹம்மத் காசிப், நகர கூட்டுறவு கடன் சங்க தலைவர் அப்துல் சுபான், நகர கூட்டுறவு வேளாண்மை சங்க தலைவர் கே. பிரகாசம், மாநில ஹஜ் கமிட்டி உறுப்பினர் பி.அகில் அஹமத்,  மாவட்ட சிறுபாண்மை நலத்துறை கருத்தாளர் ஜீஷான் அக்பர், தன்ஜீம் ஜமாத் தலைவர் அஸ்மத் பாஷா, உபைதூர் ரஹ்மான் உட்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.  முஸ்லிம் மகளிர் உதவும் சங்க இணை செயலாளர் பிர்தோஸ் பேகம் நன்றி கூறினார்.

Label