OUR CLIENTS
சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாப பலி!
சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாப பலி! Posted on 13-Dec-2018 சாலை விபத்தில் கல்லூரி மாணவன் பரிதாப பலி!

வாணியம்பாடி, டிச.13-
வாணியம்பாடி அருகே சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவன் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். அவரது மகன் மாதவன்(18). இவர் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் பிரிவில் பயின்று வருகிறார். இவர் தினமும் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருவது வழக்கம் நேற்று காலை கல்லூரி பேருந்தை தவற விட்டதால் அவரது நண்பரான நீதியரசன்(18) மூலம் ஆம்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தபோது வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடி அருகே முன்னால் சென்றுகொண்டிருந்த ஷேர் ஆட்டோ மீது இருசக்கர வாகனம் மோதி பின்னர் நிலை தடுமாறி கீழே விழுந்த மாதவன் மீது பின்னால் வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
பின்னர் அவருடன் சென்ற அவருடைய நண்பர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நீதியரசனை அப்பகுதி மக்கள் மீட்டு  வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Label