OUR CLIENTS
பராமரிப்பு இல்லாத சலவை துறை!
பராமரிப்பு இல்லாத சலவை துறை! Posted on 13-Dec-2018 பராமரிப்பு இல்லாத சலவை துறை!

திருத்தணி, டிச.13-

திருத்தணி நகராட்சியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்திய சலவை துறை பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதற்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்தி, துணிகள் காய வைப்பதற்கு வசதிகள் செய்து தர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
திருத்தணி நகராட்சியில் 200க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் துணிகள் துவைப்பதற்கும், அதை காய வைப்பதற்கும் போதிய வசதிகள் செய்து தர வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.இந்நிலையில் இரண்டு ஆண்டுக்கு முன், நகராட்சி நிர்வாகம் அனுமந்தாபுரம் பகுதியில் குளம், ஆழ்துளை கிணறு, துணிகள் பாதுகாக்கும் அறை மற்றும் சலவை கற்கள் என மொத்தம் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தியது. அதை சலவை தொழிலாளர்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. ஆனால் சலவை துறைக்கு சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. இதனால் சில சமூக விரோதிகள் அங்கு சென்று மது குடிப்பது, சீட்டாட்டம் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் ஒரு சிலர் சலவை துறை அமைத்த இடத்தில் காலை கடனை கழித்து அசுத்தப்படுத்துகின்றனர்.இது தவிர செடிகள் வளர்ந்தும் பராமரிப்பு இல்லாததால் சலவைத் தொழிலாளர்கள் அங்கு செல்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் சலவை துறைக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Label