OUR CLIENTS
இயக்குநர் சேரனின் புதிய படம் அதிகாரபூர்வ அறிவிப்பு!
இயக்குநர் சேரனின் புதிய படம் அதிகாரபூர்வ அறிவிப்பு! Posted on 13-Dec-2018 இயக்குநர் சேரனின் புதிய படம் அதிகாரபூர்வ அறிவிப்பு!

சென்னை, டிச.13-

இயக்குநர் சேரன் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்கும் திருமணம் - சில திருத்தங்களுடன் என்கிற படத்தை இயக்குகிறார் சேரன். இந்த அறிவிப்பையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.
1997-ல் பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சேரன் 2009-ல் பொக்கிஷம் படத்தை இயக்கும் வரை இடைவெளியில்லாமல் இயங்கி வந்தார். அந்தப் படத்தின் தோல்விக்குப் பிறகு 2015-ல்தான் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை என்கிற சேரன் இயக்கிய படம் வெளியானது. இந்தப் படம் நேரடியாகத் திரையரங்கில் வெளியாகாமல் டிவிடி வழியாக வெளியிடப்பட்டது. இந்நிலையில் திருமணம் - சில திருத்தங்களுடன் என்கிற படத்தை இயக்கவுள்ளதாக சேரன் அறிவித்துள்ளார்.

Label