OUR CLIENTS
பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை
பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை Posted on 13-Dec-2018 பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை

சென்னை, டிச.13-    

வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச் சாலையில் சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்தனர்.
வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பாக இன்று சசிகலாவிடம் சிறையில் விசாரணை நடைபெற உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச் சாலையில் சசிகலா அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Label