OUR CLIENTS
மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் கடும் அமளி!
மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் கடும் அமளி! Posted on 13-Dec-2018 மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் கடும் அமளி!

புதுடெல்லி, டிச.13-

பாராளுமன்றத்தில் நேற்று மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. 
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளான நேற்று முன்தினம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் தற்போதைய எம்பிக்கள், முன்னாள் எம்பிக்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தின்போது ரிசர்வ் வங்கி, பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி காங்கிரஸ் எம்பி. ரஞ்சீத் ரஞ்சன் மக்களவையில் நேற்று நோட்டீஸ் கொடுத்துள்ளார். 
இதேபோல் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக்கோரி அதிமுக சார்பில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேகதாது விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
இந்த பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியது. அப்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். மேகதாது விவகாரம் தொடர்பாக முதலில் விவாதிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அமளி நீடித்ததால் அவையை நடத்த முடியாத சூழல் நிலவியது. இதையடுத்து இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Label