OUR CLIENTS
விழுப்புரத்தில் வழக்குகளில் சிக்கிய வாகனங்களை காவல் துறையில் பணியாற்றுவோர் இயக்கும் அவலம்!
விழுப்புரத்தில் வழக்குகளில் சிக்கிய வாகனங்களை காவல் துறையில் பணியாற்றுவோர் இயக்கும் அவலம்! Posted on 14-Dec-2018 விழுப்புரத்தில் வழக்குகளில் சிக்கிய வாகனங்களை காவல் துறையில் பணியாற்றுவோர் இயக்கும் அவலம்!

விழுப்புரம், டிச.14-

விழுப்புரத்தில் பலவித வழக்குகளில் சிக்கிய வாகனங்களை எடுத்து காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் உபயோகிக்கும் அவலம் தொடர்ந்து நடந்து வருகிறது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் என்றாலே அடுத்தவர் சொத்துக்களை அபகரிப்பதில் வல்லவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட வாகனங்களை அந்தந்த காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் தைரியமாக எடுத்து கொண்டு அதில் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வலம் வருகின்றனர். ஒவ்வொரு காவலர்கள் வீட்டிலும் 3 முதல் 5 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு குடும்பமே பயன்படுத்தி வருகிறது. அடுத்தவர் சொத்துக்களை அனுபவிப்பதிலேயே குறியாக உள்ளனர். இதை யாராவது வாகன உரிமையாளர்கள் தட்டிக் கேட்டால் அவர்களை அடித்து துன்புறுத்துவது, வழக்கு தொடர்ந்து விடுவேன் என்று அவர்களை மிரட்டி உருட்டுவது என்று தனது சேட்டைகளை கட்டவிழ்த்து விடுகின்றனர் காவலர்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மட்டும் நல்லவராக இருந்து என்ன பயன் அளிக்கப் போகிறது. விழுப்புரம் மேற்கு, தாலுகா, நகர காவல் நிலைய எல்லைகளில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து ரயில்கள் வாயிலாக கொண்டு வரப்படும் கள்ளச்சாராயம் அமோகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு ஒருபுறம் மாமூல் வசூலாகிறது.  இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை தைரியமாக பயன்படுத்தும் நிலைக்கு காவலர்கள் எந்த பின்புலத்தில் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. காவல் துறையில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் என்று யாருமே எதைப் பற்றியும் கண்டுகொள்வதில்லை. ஒரு காவலரின் குடும்பம் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்கள் அனைத்திலும் போலீஸ் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. காவல் துறையில் பணியாற்றுவோர் மட்டுமே பயன்படுத்த வேண்டியதை ஒட்டுமொத்த குடும்பமும் பயன்படுத்துவது எவ்விதத்தில் நியாயம். சாராய வழக்குகளில் சிக்கும் வாகனங்களை கூட காவல் துறையில் பணியாற்றுவோர் பயன்படுத்துகின்றனர். இப்படி இந்த வாகனங்களை சாராயம் கடத்த காவலர்களே சமூக விரோதிகளுக்கு வழங்குவதாகவும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை முழுமையாக பார்க்க வேண்டியதில்லை. விழுப்புரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களை பரிசோதித்தாலே இதில் உள்ள உண்மை தன்மை வெளிவரும். இதோடு மட்டுமன்றி காவல் துறையில் பணியாற்றும் சில கருப்பு ஆடுகள் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுபாட்டில்கள், சாராயம் கடத்த அதுபோன்ற வாகனங்களை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் போலீஸ், பிரஸ் என்ற ஸ்டிக்கர்கள்  ஒட்டிய வாகனங்களை தயவுதாட்சண்யமின்றி நிறுத்தி முழுமையாக சோதனைக்கு உட்படுத்த காவல் துறை முன்வர வேண்டும். அதுவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் நடந்தால் நலம் பயக்கும். இப்படி நடந்தால் போதும் பல போலிகள் நடமாட்டம் இருப்பது தெரியவரும். கயவர்கள், நயவஞ்சகர்கள், போலிகள் முகத்திரை கிழியும். காவல் துறையில் பணியாற்றும் ஒரு சிலரை தவிர பலர் நேர்மையாக நடந்து கொள்வதே இல்லை. எப்படி அபகரிப்பது, மிரட்டுவது என்பதை மட்டும் கற்று வைத்து கொண்டு களத்தில் புகுந்து விளையாடுகின்றனர். ஆதலால் இதுபோன்ற வாகனங்களை வாகன தணிக்கை செய்து ஆவணங்கள் இல்லாததை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரின் அதிரடி நடவடிக்கைகள் இதிலும் தொடர்ந்தால் பொதுமக்கள் பயன் அடைவார்கள். 

Label