OUR CLIENTS
கமல் தனித்து போட்டி?
கமல் தனித்து போட்டி? Posted on 14-Dec-2018 கமல் தனித்து போட்டி?

சென்னை, டிச.14-

தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி கை விட்டால், தனித்து போட்டியிட, நடிகர் கமலின், மக்கள் நீதி மையம் கட்சி தயாராகி வருகிறது.
தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய மூன்றும் இன்னமும் நட்பு கட்சிகளாகவே உள்ளன. திருச்சி லோக்சபா தொகுதியை மனிதநேய மக்கள் கட்சி எதிர்பார்க்கிறது. வட சென்னை, தென் சென்னை, ஈரோடு ஆகியவற்றில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட ம.தி.மு.க., விரும்புகிறது. இந்த மூன்று கட்சிகளும் தி.மு.க., கூட்டணியில் உறுதி செய்யப்படாமல் உள்ளன. காங்கிரஸ் உள் ஒதுக்கீட்டில் ஒரு தொகுதியில் போட்டியிட நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் கட்சி விரும்புகிறது. ஆனால் அக்கட்சிக்கு தொகுதி ஒதுக்குவது குறித்து இன்னும் காங்கிரஸ் தலைமை முடிவு செய்யவில்லை
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால் தி.மு.க.,விடம் கூடுதல் தொகுதிகளை கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனால் தனக்கான தொகுதிகளில் ஒன்றை கமலுக்கு உள் ஒதுக்கீடாக தர தற்போது காங்கிரஸ் முன்வருமா என்பது கேள்விக்குறியே.
இதனால் தனித்து போட்டியிடும் முடிவுக்கு கமல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தால் அதில் தனித்து போட்டியிட்டு தன் கட்சியின் ஓட்டு சதவீதத்தை நிரூபிக்க கமல் காத்திருப்பதாக தெரிகிறது.

Label