OUR CLIENTS
தலைவர்கள் சிலையை மறைத்து சுற்றுச்சுவர் தூத்துக்குடி பொதுமக்கள் கடும் கண்டனம்!
தலைவர்கள் சிலையை மறைத்து சுற்றுச்சுவர் தூத்துக்குடி பொதுமக்கள் கடும் கண்டனம்! Posted on 14-Dec-2018 தலைவர்கள் சிலையை மறைத்து சுற்றுச்சுவர் தூத்துக்குடி பொதுமக்கள் கடும் கண்டனம்!

தூத்துக்குடி, டிச.14-

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் தலைவர்கள் சிலை மறையும்படி சுற்றுச்சுவர் கட்டுவது குறித்து பொதுமக்கள் ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பினார்கள். அத்துடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி புதிய  மாநகராட்சி கட்டடம் கட்டிய பின்னர் பழைய மாநகராட்சி கட்டடத்தில் இ சேவை மையம் மற்றும் மருத்துவமனை  செயல்பட்டு வருகிறது. இங்கு தேசத்தலைவர்களான மகாத்மா காந்தி, வ.உ.சிதம்பரனார், முன்னாள் முதல்வர்கள் காமராஜர், அண்ணாதுரை, எம்ஜிஆர் ஆகியோரது சிலைகள் உள்ளன. தற்போது மாநகராட்சி சார்பில் நகரில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக பழைய மாநகராட்சியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதில் தலைவர்கள் சிலை மறையும் அளவில் அங்கு கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அவை முழுமையாக கட்டப்பட்டால் சிலைகள் தெரியாமல் மறைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், ஒப்பந்ததாரரிடம் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அத்துடன் இதற்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். ஆதலால் தலைவர்களின் சிலைகள் வெளியில் இருந்து பார்த்தால் தெரியுமாறு சுற்றுச்சுவர் கட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Label