OUR CLIENTS
6ம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை 3 இளைஞர்கள் அதிரடி கைது!
6ம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை 3 இளைஞர்கள் அதிரடி கைது! Posted on 14-Dec-2018 6ம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை 3 இளைஞர்கள் அதிரடி கைது!

வாணியம்பாடி, டிச.14-

ஆம்பூரில் 6ம் வகுப்பு பள்ளி மாணவியை காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆட்டோ ஓட்டுநர் உட்பட 3 பேர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இரண்டு பேர் தலைமறைவு ஆகிவிட்டனர்.
வேலூர் மாவட்டம், ஆம்பூர் வாத்திமனை பகுதியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் பைரோஸ் அகமது. இவரது மகள் ஆயிஷா பாத்திமா (13) பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதே பகுதியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 2 ஆண்டு காலமாக சக மாணவிகளுடன் வாடகை ஆட்டோவில் பள்ளிக்குச் சென்று வரும் நிலையில் நேற்றுமுன்தினம் காலை  வழக்கமாக ஆட்டோவில் பள்ளிக்குச் சென்ற மாணவியை அதே பகுதியில் உள்ள மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் பள்ளிக்கு அருகே மாணவியை காரில் கடத்தி கொண்டு பெங்களூருக்குச் சென்று அங்குள்ள  தனியார் விடுதியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 
இது குறித்து மாணவியின் தந்தை பைரோஸ் அகமது ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த டி.எஸ்.பி. சச்சிதானந்தம் தலைமையிலான தனிப்படை போலீசார் மாணவியை மீட்டு பெங்களூரு பகுதியில் பதுங்கியிருந்த  ஆட்டோ டிரைவர் அர்ப்பான், இர்பான்கான், முதாசீர் ஆகிய 3 பேரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தப்ரேஸ் மற்றும் ஷேபாஸ் ஆகிய இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். 
மேலும் ஆட்டோ டிரைவரான அர்ப்பான் கடந்த ஆண்டு இதே போல் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை கடத்திச் சென்று 20 லட்சம் கேட்டு மிரட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பள்ளி மாணவியை கடத்திச் சென்று 5 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஆம்பூர் பகுதியில் பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களது பெண் குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது என்று குழப்பத்தில் பெற்றோர் ஆழ்ந்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார்தான் இதற்கு ஒரு அதிரடி நடவடிக்கையை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Label