OUR CLIENTS
மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்!
மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்! Posted on 14-Dec-2018 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமணம்!

தூத்துக்குடி, டிச.14-

தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் சார்பில், 6 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு நேற்று காலை கூட்டுத் திருமணம் நடந்தது. 
விழாவில் ஒவ்வொரு ஜோடிக்கும் தலா ரூ.2 லட்சம் மதிப்பிலான தங்கத்தாலி, திருமண ஆடைகள், மிக்ஸி, கிரைண்டர், குளிர் சாதனப்பெட்டி, போன்ற சீதன பொருட்கள் நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டது. விழாவில் அருட்தந்தை கிருபாகரன், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மருத்துவர்கள், நன்கொடையாளர்கள், உறவினர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Label