OUR CLIENTS
நரிக்குறவக் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கிய மாணவி!
நரிக்குறவக் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கிய மாணவி! Posted on 14-Dec-2018 நரிக்குறவக் குழந்தைகளுக்கு கல்வி  ஊக்கத்தொகை வழங்கிய மாணவி!

கரூர், டிச.14-

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நரிக்குறவக் குழந்தைகளுக்கு தனியார் பள்ளி மாணவி ரூ.15,000 கல்வி ஊக்கத்தொகையை  வழங்கினார்.
ராமேசுவரப்பட்டியைச்  சேர்ந்தவர் ரக்ஷனா(14). இவர் கரூர் காக்காவாடியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.  மரம் வளர்ப்பின் அவசியம், குறைந்த நீரில் விவசாயம் செய்தல்,  பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 
இதைத் தொடர்ந்து,  கரூர் சிஎஸ்ஐ. ஆண்கள் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பயிலும் வேட்டைக்காரன்புதூர் ரஞ்சித்குமார்,  சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஒன்பதாம் வகுப்பு பயிலும் வாசுகி, ஜோதிலட்சுமி ஆகிய  நரிக்குறவக் குழந்தைகளுக்கு தலா ரூ.5000 வீதம் ஊக்கத்தொகையை  ரக்ஷனா  வழங்கினார். நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியை  ஜெ.ஹெலன்பிரேம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Label