OUR CLIENTS
நேபாள நாட்டில் சீதா கல்யாண உற்சவம்
நேபாள நாட்டில் சீதா கல்யாண உற்சவம் Posted on 14-Dec-2018 நேபாள நாட்டில் சீதா கல்யாண உற்சவம்

காத்மண்டு, டிச.14-

நேபாள நாட்டின் ஜனக்புரியில் நடைபெற்ற சீதா கல்யாண உற்சவத்தில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு ராமர்-சீதாதேவியை வழிபட்டார்.
நேபாள நாட்டின் ஜனகபுரியில் அமைந்துள்ளது சீதாதேவி கோவில். இது ராமரின் மனைவியான சீதாதேவியின் பிறந்த ஊராக கருதப்படுகிறது. இங்கு அமைந்துள்ள சீதாதேவி கோவிலுக்கு பலரும் வந்து சென்று வழிபடுவது வழக்கம்.
விவாஹ பஞ்சமியை முன்னிட்டு இந்த கோவிலில் சீதா கல்யாணம் நிகழ்ச்சி நேற்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். சீதா கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத் ராமர் - சீதாதேவியை வழிபட்டார்.

Label