OUR CLIENTS
சீன கடனை அடைக்க ஐ.எம்.எஃப். பணம் இல்லை அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
சீன கடனை அடைக்க ஐ.எம்.எஃப். பணம் இல்லை அமெரிக்கா அதிரடி அறிவிப்பு Posted on 14-Dec-2018 சீன கடனை அடைக்க ஐ.எம்.எஃப். பணம் இல்லை அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன், டிச.14-

பாகிஸ்தானுக்கு பன்னாட்டு செலவாணி நிதியம் (ஐ.எம்.எஃப்) அளிக்கும் கடனுதவி சீனாவின் கடனை அடைக்க பயன் படுத்தப்படுவதை தடுக்க டிரம்ப் நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என அமெரிக்கா அறிவித்துள்ளது.
பன்னாட்டு செலவாணி நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் அரசு 800 கோடி டாலர் கடன் உதவி கேட்டுள்ளது. பாகிஸ்தான் கடுமையான நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிப்பதால் இந்த கடன் தொகையை கேட்டுள்ளது. இது குறித்து ஐ.எஃப் மற்றும் பாகிஸ்தான் பிரதிநிதிகளுடன் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
சீனா பிற நாடுகளுக்கு மிக அதிகளவில் கடனுதவி வழங்கி, அதன் மூலம்  அந்த நாடுகளை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா முயற்சிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
அந்த அடிப்படையில் பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கும் சீனா அளித்த கோடிக்கணக்கான டாலர் கடனுதவி தான் காரணம் என அமெரிக்கா கருதுகிறது.
இந்த சூழ்நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் நிதி சேவை கமிட்டியில்  'சர்வதேச நிதி நிறுவனங்களின் திறன் மதிப்பீடு' என்ற தலைப்பில் விசாரணை நடைபெற்றது.
அப்போது பன்னாட்டு செலவாணி நிதியத்திடம் பாகிஸ்தான் கோடிக்கணக்கான டாலர் கடன் உதவி கேட்டு வருவதை அமெரிக்க எம்.பி எட் ரோய்ஸ் குறிப்பிட்டார். அமெரிக்க டாலர்கள் மற்றும் ஐ.எம்.எஃப் ௹ன் வரி பணம் அனைத்தும் சீனாவின் கடனை திருப்பி செலுத்த பயன்படுத்தப்படுவது நியாயமல்ல என்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ கடந்த ஜூலை மாதம் தெரிவித்ததையும் எட் ரோய்ஸ் சுட்டி காட்டினார்.
அப்போது விசாரணையில் ஆஜரான அமெரிக்க நிதி அமைச்சகத்தின் சர்வதேச விவகாரங்கள் துறையின் துணை செயலாளர் டேவிட் மால்பாஸ் இதற்கு பதிலளித்தார்.
நாங்கள் பன்னாட்டு செலவாணி நிதியத்துடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஒருவேளை அவர்கள் பாகிஸ்தானுக்கு கடன் உதவி அளிக்கும் பட்சத்தில் அந்த பணம் சீனாவின் கடனை திருப்பி செலுத்த பயன்படுத்தப்பட கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
பாகிஸ்தான் தன் பொருளாதார திட்டங்களை மாற்றி அதன் மூலம் எதிர்காலத்தில் தோல்வி அடைவதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும் முயற்சிகள் செய்து வருகிறோம்.
நீங்கள் கூறியது போல் பாகிஸ்தான் மூலமாக சீனாவுக்கு பணம் சென்று சேராமல் தடுக்க நாங்கள் தீவிர முயற்சிகள் மேற்கொள்வோம். அந்த முயற்சிகள் வெற்றி பெறும் என நம்புகிறோம் என்று டேவிட் மால்பாஸ் தெரிவித்தார்.

Label