OUR CLIENTS
தினகரனை நடுரோட்டில் விட்ட செந்தில் பாலாஜி!
தினகரனை நடுரோட்டில் விட்ட செந்தில் பாலாஜி! Posted on 14-Dec-2018 தினகரனை நடுரோட்டில் விட்ட செந்தில் பாலாஜி!

கரூர், டிச.14-

டி.டி.வி.தினகரனை முதல்வராக்குவேன் என்று கூறிய செந்தில்பாலாஜி அவரை நடுரோட்டில் விட்டு விட்டு வந்து விட்டார் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கடுமையாக தாக்கி பேசினார். 
டி.டி.வி.தினகரனை முதல்வராக்குவேன் என்று கூறிய செந்தில்பாலாஜி அவரை நடுரோட்டில் விட்டு விட்டு வந்து விட்டார். தி.மு.க.வில் இணைந்தால் செந்தில்பாலாஜிக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும். அவருடன் செல்வபவர்கள் வாசல் வரை சென்று திரும்பும் நிலையே ஏற்படும். அங்கிருந்து அ.தி.மு.க.விற்கு வரும் நபர்களுக்கு உரிய மரியாதையும் பாதுகாப்பும் கொடுக்கப்படும்.
கட்சியில் போட்டிகள் இருக்கலாம். ஆனால் விசுவாசமாக இருக்க வேண்டும். பதவி வெறியில் திரியும் அவர் விரைவில் தினகரனை விட்டு சென்று விடுவார் என கூறி வந்தேன். ஏற்கனவே செந்தில்பாலாஜி ம.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு சென்று பின்னர் பதவிக்காக அ.தி.மு.க.விற்கு வந்தார். தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த அவர் தி.மு.க.விற்கு செல்கிறார். அடுத்து எத்தனை கட்சிக்கு செல்வார் என்பது தெரியவில்லை. நமக்கு அ.ம.மு.க. எதிரி கிடையாது. நான் தான் சாகிற வரைக்கும் அமைச்சர் என்பது நடக்காதது. பதவி எல்லாம் அவரவர் தலையெழுத்துப்படிதான் அமையும். பிறந்தபோதே மந்திரியாக இருந்ததை போல் செந்தில்பாலாஜி செயல்படுகிறார். எனக்கு ஆண்டவனும், ஜெயலலிதாவும் கொடுத்த பதவி இது. 3 மாதங்களுக்கு முன்பே கட்சி தாவ செந்தில்பாலாஜி முடிவு செய்து விட்டார். தற்போது 4 தினங்கள் முன்பு வரை தினகரனுடன் இருப்பதாக ஏமாற்றியுள்ளார்.

Label