OUR CLIENTS
பாராளுமன்றம் மீது தாக்குதல் நடந்த தினம் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை
பாராளுமன்றம் மீது தாக்குதல் நடந்த தினம் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை Posted on 14-Dec-2018 பாராளுமன்றம் மீது தாக்குதல் நடந்த தினம் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி மரியாதை

புதுடெல்லி, டிச.14-

பாராளுமன்றத்தில் தாக்குதல் நடந்த 17ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி பாராளுமன்றத்தின் மீது 5 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளின் தாக்குதலின் போது உயிர்த்தியாகம் செய்த வீரர்களுக்காக பாராளுமன்ற வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டது. வீரர்களின் நினைவு தினமான நேற்று பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணை தலைவர் வெங்கைய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பிரதமர் மரியாதை
பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில்,"கடந்த 2001 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு நான் தலை வணங்குகிறேன். அவர்களது தைரியம் மற்றும் வீரம் அனைத்து இந்தியரையும் ஊக்குவிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Label