OUR CLIENTS
நாய்க்கறி வதந்தியால் சரிந்த ஆம்பூர் பிரியாணி விற்பனை!
நாய்க்கறி வதந்தியால் சரிந்த ஆம்பூர் பிரியாணி விற்பனை! Posted on 15-Dec-2018 நாய்க்கறி வதந்தியால் சரிந்த ஆம்பூர் பிரியாணி விற்பனை!

வேலூர், டிச.1-

நாய்க்கறி வதந்தி பரவியதால் வேலூர் மாவட்டத்தில் பிரபலமான ஆம்பூர் பிரியாணி விற்பனை சரிந்துள்ளது என பிரியாணி மாஸ்டர்கள் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் இக்பால் பேசினார்.
வேலூர் மாவட்டம், ஆம்பூரில், தமிழக பிரியாணி மாஸ்டர்கள் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பக்ருதீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் யாஸ்மீன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் இக்பால் பேசியதாவது: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் இருந்து, ரயில் மூலம், சென்னை வந்த ஆட்டிறைச்சியை, நாய்க்கறி என, கடந்த மாதம் சிலர் வதந்தி பரப்பினர். 
இதே வதந்தி, வேலூர் மாவட்டத்தில், பிரியாணிக்கு புகழ் பெற்ற ஆம்பூர், வாணியம்பாடி, பேர்ணாம்பட்டு, குடியாத்தம், ராணிப்பேட்டை, விஷாரம், ஆற்காடு பகுதிகளிலும் பரவியது. வேலூர் மாவட்டத்தில், வதந்திக்கு முன், தினசரி, 24 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான பிரியாணி, தற்போது, 10 லட்சம் ரூபாயாக குறைந்து விட்டது. இதனால், நூற்றுக்கணக்கான பிரியாணி மாஸ்டர்கள், உதவியாளர்கள் வேலையிழந்துள்ளனர். நாய்க்கறி வதந்தியை தடுக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரியாணி மாஸ்டர்கள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தவறான வதந்தி பரப்புவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Label