OUR CLIENTS
குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல்!
குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல்! Posted on 15-Dec-2018 குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல்!

புதுச்சேரி, டிச.15-

புதுச்சேரி அருகே குவித்து வைக்கப்பட்டிருந்த ஆற்று மணலை வருவாய்த் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் தொடர்ந்து நடைபெறும் மணல் திருட்டைத் தடுக்க துணை ஆட்சியர் உதயகுமார், வட்டாட்சியர் மேத்யூ பிரான்சிஸ் ஆகியோர் உத்தரவின் பேரில் துணை வட்டாட்சியர் நித்தியானந்தம் தலைமையில் துணை வட்டாட்சியர்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரிகள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடத்திலில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து, மேல்நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில்  ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் அள்ளி வந்து குவித்து வைக்கப்பட்டிருந்த 3 யூனிட் மணலை துணை வட்டாட்சியர் வெங்கட்ராமன் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், அங்கு மணல் குவித்தலில் ஈடுபட்டோரை தேடியும் வருகின்றனர்.

Label