OUR CLIENTS
தண்டவாளங்களை கடக்கும் பயணியரால் காத்திருக்கும் ஆபத்து!
தண்டவாளங்களை கடக்கும் பயணியரால் காத்திருக்கும் ஆபத்து! Posted on 15-Dec-2018 தண்டவாளங்களை கடக்கும்  பயணியரால் காத்திருக்கும் ஆபத்து!

காஞ்சிபுரம், டிச.15-

 அரக்கோணம்  -  செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் ஆபத்தான முறையில், தண்டவாளங்களை கடந்து செல்வோரை போலீசார் தடுக்க வேண்டும்.
அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டு வரை ரயில் வழித்தடம் உள்ளது. இவ்வழித்தடத்தில் தக்கோலம், திருமால்பூர், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கிழக்கு, நத்தப்பேட்டை, வாலாஜாபாத், பழையசீவரம், பாலூர், ரெட்டிபாளையம் ரயில் நிறுத்தங்கள் உள்ளன.மின்சார ரயில் மற்றும் டீசல் ரயிலை பிடிப்பதற்கு நத்தப்பேட்டை, வாலாஜாபாத், பழைய சீவரம் ரயில் நிலையங்களில் தண்டவாளத்தை பயணியர் ஆபத்தான முறையில் கடக்கின்றனர்.இதனால் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க ரயில்வே காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Label