OUR CLIENTS
சுற்றுலா பயணிகள் வருகை குறைவு வெறிச்சோடியது தேக்கடி!
சுற்றுலா பயணிகள் வருகை குறைவு வெறிச்சோடியது தேக்கடி! Posted on 15-Dec-2018 சுற்றுலா பயணிகள் வருகை குறைவு வெறிச்சோடியது தேக்கடி!

கூடலூர், டிச.15-

சுற்றுலாப்பயணிகள் வருகை மிக குறைந்துள்ளதால் தேக்கடி வெறிச்சோடி காணப்பட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் தேக்கடியும் ஒன்று. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவர். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் தேங்கியிருக்கும் ஏரியில், படகு சவாரி செய்து கொண்டே, வனவிலங்குகளை கண்டு ரசிப்பர். தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு துவங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதனால் 8 படகுகளில் ஒன்று மட்டுமே இயக்கப்படுகிறது. எப்போதும் கூட்டத்தால் பிஸியாக இருக்கும் தேக்கடி, தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. தேர்வு முடிந்தபின் பயணிகள் அதிகம் வருவர் என கேரள வனத்துறையினர் தெரிவித்தனர்.

Label