OUR CLIENTS
புதிய கட்டட பணிக்காக பூமி பூஜை அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்பு!
புதிய கட்டட பணிக்காக பூமி பூஜை அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்பு! Posted on 15-Dec-2018 புதிய கட்டட பணிக்காக பூமி பூஜை அமைச்சர் டி.ஜெயக்குமார் பங்கேற்பு!

சென்னை, டிச.15-

ராயபுரம் தொகுதி 48வது வட்டம் டி.எச். ரோட்டில் அமைந்துள்ள நர்ஸ் ஆஸ்பிட்டல் என பொது மக்களால் அழைக்கப்படும் டாக்டர் வி.ஆர். நகர் மருத்துவமனை சுமார் 120 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்தது. இந்த மருத்துவமனை கட்டடம் பழுதடைந்ததால் அதனை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட தனது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிதியை ஒதுக்கீடு செய்து புதிய கட்டட பணிக்காக பூமி பூஜையை தொடங்கி வைத்தார் அமைச்சர் டி.ஜெயக்குமார். 
மேலும் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஜெயக்குமார், டி.டி.வி.தினகரன் அணியில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவுக்க்கு போனததினால் அதிமுகவுக்கு எந்த  பாதிப்பும் கிடையாது. ஏற்கனவே செந்தில்பாலாஜி திமுக காரர் அந்த விசுவாசத்துக்காக திமுகவுக்கு அவர் சென்றார். ஆனால் அவரடன் இருக்கும் அதிமுக காரர்கள்  யாரும் திமுகவுக்கு செல்லவில்லை.   அதிமுகவின்  உண்மையான விசுவாசிகள் யாரும் திமுகவுக்கு செல்ல மாட்டார்கள்.
கடலுக்கு சென்ற மீனவர்கள் பாதிப்பேருக்கு மேல் திரும்பி விட்டார்கள். ஹெச். ராஜா  தொடர்ந்து அவதூறாக பேசி வருவதை சம்பந்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

Label