OUR CLIENTS
தலைக்கவசம் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு!
தலைக்கவசம் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு! Posted on 15-Dec-2018 தலைக்கவசம் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு!

பெரம்பூர், டிச.15-
சென்னை பூக்கடை காவல் நிலையம் போக்குவரத்து ஆய்வாளர் வேலுவின் தலைமையில் அவரும் அவருடன் குழுக்களாக காவலர்களும் தலைக்கவசம் அணிவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
  தலைக் கவசத்தின் நன்மைகளையும், பயன் பாட்டையும் உணர்த்தும் வகையில் முகாம் ஒன்றையும் நடத்தி வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கினார். போக்குவரத்து நெரிசலான இடமான ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் எதிரே இந்த விழிப்புணர்வை நடத்தினர். இதில் பொதுமக்கள் தலைக்கவசம் அணியாதவர் களிடம் தலைக்கவசத்தை வாங்கி வரச் சொல்லி தலையில் போடச் சொல்லியும், தலைக்கவசம் அணிவதன் பயன் பாட்டினையும் கூறினர்.
இதனால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இப்படி அதிரடியாக நடவடிக்கை எடுக்க காரணமே கடற்கரை சாலையில் விபத்து ஏற்பட்டதுதான். அந்த விபத்தில் சென்னை மாநகர பேருந்து, சொகுசு காரை முந்திச் செல்லும் போது நேருக்கு நேராக மோதிக்கொண்டது. இதனால் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது குறிப்பிடத்தக்கது. மனிதநேயம் காக்கிக்கு உள்ளும் உள்ளது என்பதை இந்த நிகழ்வு நினைவூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கருணையின் நிறம் காக்கி என்பதை மீண்டும் நிரூபிப்பது போன்று இந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

Label