OUR CLIENTS
தேசிய அணைப் பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெற கோரிக்கை பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்
தேசிய அணைப் பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெற கோரிக்கை பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் Posted on 15-Dec-2018 தேசிய அணைப் பாதுகாப்பு மசோதாவை வாபஸ் பெற கோரிக்கை பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்

சென்னை, டிச.15-

மக்களவையில் மத்திய நீராதாரத்துறை, நீதி அபிவிருத்தி, கங்கை புத்துயிர்ப்பு துறையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அணைப் பாதுகாப்பு மசோதாவை உடனடியாக வாபஸ்பெற சம்பந்தப்பட்ட இரு துறைகளுக்கும் உத்தரவிடும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அணை பாதுகாப்பு மசோதா தொடர்பாக உங்களின் உடனடித் தலையீடு இப்பொழுது தேவைப்படுகிறது. மாநிலங்களுடன் கலந்து பேசி ஒருமித்த கருத்து உருவாகும்வரை இந்தப் பிரச்சினையில் சட்ட மசோதா தயாரிக்க வேண்டாம் என்று 15.06.2018 அன்று தங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்பதை தங்களுக்கு நினைவுப்படுத்த இப்பொழுது விரும்புகிறேன்.
தமிழக சட்டப் பேரவையிலும் 26.6.2018க்கு இந்தப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தின் கவலைகளைத் தெரிவிக்க தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானமும் உடனடி நடவடிக்கைகாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தமிழகத்தின் கடுமையான கவலைகள் குறித்து இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநில அரசுகளின் கருத்துகள், அபிப்பிராயங்கள் குறித்து பரிசீலனை எதுவும் செய்யாமல் இப்பொழுது மசோதாவும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முக்கிய கவலைகள் வருமாறு: (அ) 2018ஆம் ஆண்டு அணை பாதுகாப்பு மசோதாவின் பிரிவு 23(1)ன் முதல் ஷரத்துப்படி ஒரு மாநிலத்தில் உள்ள அணை வேறொரு மாநிலத்துக்கு சொந்த மானதாக இருந்தால் அந்த அணைக்கு மாநில அணை பாதுகாப்பு நிறுவனமாக தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் செயல்படும் என்று கூறுகிறது. இதன் பொருள் என்னவென்றால் அணைக்கு உரிய சொந்த மாநிலம் அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியவற்றின்மீது எந்த உரிமையும் இராது என்று பொருள்.
தமிழகத்தின் முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துனைக்கடவு, பெருவாரிப் பள்ளம் ஆகிய அணைகளுக்கு சொந்தக்காரராக தமிழகம் உள்ளது. அந்த அணைகளை இயக்குவதும் பராமரிப்பதும் தமிழகம்தான். ஆனால், இந்த நான்கு அணைகளும் அண்டை மாநிலத்தில் உள்ளன. இதற்காக இரு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தங்கள் உள்ளன. மேலும், இந்திய உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, முல்லைப் பெரியாறு அணை மீது தமிழகத்துக்கு உள்ள உரிமையை தன்னுடைய 7.5.2014ந் தேதியிட்ட தீர்ப்பில் ஒப்புக்கொண்டுள்ளது.
எனவே, இந்த அணைகளுக்கு அணை பாதுகாப்பு ஆணையமாக தமிழகம் செயல்பட உள்ள உரிமையா மறுப்பதும் அந்த அதிகாரத்தை தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்திடம் ஒப்ப டைப்பதும் தமிழகத்தின் உரிமைகளை ஆக்கிரமிப்பதும் ஆகும். இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. நம்முடைய அரசியல் சட்டத்தின் கூட்டாட்சி உணர்வுகளை மறுப்பதாகும்.
எனவே, மேலே குறிப்பிட்ட அந்த ஷரத்தை பொருத்தமான வகையில் திருத்திட வேண்டும். அத்திருத்தம் மூலம் ஒரு மாநிலத்துக்குச் சொந்தமான, அந்த மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, அதனால் இயக்கி, பராமரிக்கப்படும் அணைகள், வேறொரு மாநிலத்தில் இருந்தாலும் அந்த மாநிலத்தின் அணை பாதுகாப்பு நிறுவனத்தின் கீழ்தான் வரவேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
(ஆ) ஒரு மாநிலத்துக்கு சொந்தமான அணைகள் முறையாக பராமரிப்பதை உறுதி செய்யும் பொருட்டு வனம் மற்றும் வனவிலங்கு புகலிடப் பகுதிகள் தொடர்பாக புதிய துணை ஷரத்து ஒன்றை அந்த மசோதாவில் சேர்க்கும்படி தமிழக அரசு ஏற்கெனவே கேட்டுக்கொண்டது. தமிழக அரசு சேர்க்கக்கோரிய துணை ஷரத்து வருமாறு: மற்ற சட்டங்களில் என்ன இடம் பெற்றிருந்தாலும் அணை பராமரிப்பு அதிகாரிகள் / ஊழியர்களுக்கு வனங்கள் மற்றும் வனவிலங்கு புகலிடங்களின் வழியாகச் சென்று அணையின் பாதுகாப்பு, பராமரிப்பு, மறு சீரமைப்பு நடவடிக்கைகளை நிறைவேற்ற உரிமை வழங்கப்பட வேண்டும்.
வனங்கள் மற்றும் வனவிலங்கு புகலிடங்களில் அமைந்துள்ள அணை களுக்கு சம்பந்தப்பட்ட அணைகளின் பராமரிப் புக்காக நியமிக் கப்பட்டவர்கள் செல்ல வழி உரிமை உறுதி செய்யப்பட வேண்டும். தமிழக அரசு தெரிவித்த இந்த கோரிக்கை 12.12.2018இல் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் சேர்க்கப்படவில்லை.
இந்தச் சூழலில் நான் மீண்டும் இந்தியப் பிரதமர் அவர்களை நீராதாரங்கள், நதி அபிவிருத்தி, கங்கைக்கு புத்துயிரூட்டல் அமைச்சகத்துக்கு 2018ஆம்  ஆண்டு அணை பாதுகாப்பு மசோதாவை உடனடியாக வாபஸ் பெறக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மசோதா தொடர்பான மேல் நடவடிக்கை எதனையும் தமிழகத்தின் உண்மையான கவலைகளுக்கு தீர்வு காணமல் மேற்கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

Label