OUR CLIENTS
திமுக தலைமையகத்தில் நாளை கருணாநிதி சிலை திறப்பு: சிலையை திறந்து வைக்க சோனியா சென்னை வருகிறார்
திமுக தலைமையகத்தில் நாளை கருணாநிதி சிலை திறப்பு: சிலையை திறந்து வைக்க சோனியா சென்னை வருகிறார் Posted on 15-Dec-2018 திமுக தலைமையகத்தில் நாளை கருணாநிதி சிலை திறப்பு: சிலையை திறந்து வைக்க சோனியா சென்னை வருகிறார்

சென்னை:-

சென்னையில் உள்ள திமுக தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலையை திறந்து வைக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்க வருகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
சிலை திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு கட்சித்  தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. தொண்டர்கள் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் விழாவிற்கு வரும்படி திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
நாளை சென்னை வரும் சோனியா காந்தி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.
அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் கருணாநிதி திருவுருவச் சிலை திறப்பு விழா முடிவடைந்ததும், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

Label