OUR CLIENTS
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி Posted on 15-Dec-2018 ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்குத் தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 
அதில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசின் மனுவையும் தள்ளுபடி செய்தது. மேலும், ஆலைக்கு தேவையான மின்சாரம் வழங்குவது, ஆலை இயக்கம் தொடர்பாக 3 வார காலத்திற்குள் புதிய வழிமுறைகளை தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் ஏற்படுத்துவது, ஆலைக் கழிவுகளைக் கண்காணிக்க தமிழக அரசு குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை இந்த தீர்ப்பில் தேசிய பசுமை தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியுள்ளது. 
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியார்களுக்கு பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு கூறினார். கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

Label