OUR CLIENTS
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அடாயம் அதிகரிப்பு!
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்துகள் ஏற்படும் அடாயம் அதிகரிப்பு! Posted on 17-Dec-2018 சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால்  விபத்துகள் ஏற்படும் அடாயம் அதிகரிப்பு!

புதுச்சேரி, டிச.17-

வடமங்கத்தில் நெஞ்சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படும் கனரக வானங்களால் விபத்து அபாயம் உள்ளது.
புதுச்சேரி வில்லியனூரை அடுத்த வடமங்கலத்தில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளுக்கு சரக்குகளை ஏற்றி செல்ல வரும் கனரக வாகனங்கள் தாறுமாறாக, விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் வடமங்கலத்தில் நெடுஞ்சாலை குறுகி, விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் லாரி ஓட்டு னர்கள் ஓட்டல்களில் சாப்பிடு வதற்காக, சாலையில் வாகனங் களை நிறுத்துகின்றனர். இதன் காரணமாகவும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகள் எந்த சைகையும் காட்டாமல் திடீரென விழுப்புரம் சாலையில் புகுந்து விடுகின்றன. இதனால் விபத்துக்கள் நடந்து வருகிறது. கனரக வாகனங்கள் சாலையோரம் நிற்பதை போக்குவரத்து போலீசார் கண்டுக்கொள்வதில்லை. இதனால் மீண்டும் சாலை யோரம் வாகனங்கள் நிறுத்துவது அதிகரித்து வருகிறது. நெடுஞ்சாலையையொட்டி பல இடங்களில் காலி இடங்கள் உள்ளன. தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்களுக்கு இந்த இடத்தில்பார்க்கிங் வசதியை செய்து கொடுக்கலாம்.அழைக்கும்போது கம்பெனிக்குள் செல்லும் வசதியை ஏற்படுத்தலாம். இதன் மூலம் வடமங்கலத்தில் விபத்துகள் குறையும்.காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையை, தொழிற்சாலைக்கு வரும் கனரக வாகனங்கள், இதே போல் ஆக்கிரமித்து விபத்தினை ஏற்படுத்தி வந்தன. பார்க்கிங் இடம் ஏற்படுத்தப்பட்ட பிறகு விபத்துகள் குறைந்தது. காலாப்பட்டு இ.சி.ஆரும் பாதுகாப்பாக மாறியது. இந்த வழிமுறையை போக்குவரத்து போலீசார் பின்பற்றலாம்.

Label