OUR CLIENTS
நம்ம சென்னை செயலிக்கு வரவேற்பு இல்லாததால் அதிர்ச்சி!
நம்ம சென்னை செயலிக்கு வரவேற்பு இல்லாததால் அதிர்ச்சி! Posted on 17-Dec-2018 நம்ம சென்னை செயலிக்கு  வரவேற்பு இல்லாததால் அதிர்ச்சி!

சென்னை, டிச.17-

சென்னை மாநகராட்சியில் தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றுதல், நாய் தொல்லை, சாலைப்பணிகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு உள்ளிட்ட புகார்கள் பெற நம்ம சென்னை செயலியை மாநகராட்சி ஜன., 23ல் தொடங்கியது. இந்த செயலி வாயிலாக பெறப்படும் புகார்களை, கீழ்நிலை அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை பார்க்க முடியும்.
புகார்களுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தப் படுகிறது. ஆனால் இந்த மொபைல் ஆப் குறித்து பொதுமக்களிடம் போதிய அளவில் விழிப்புணர்வு இல்லாததால் 16 ஆயிரத்து 744 பேர் மட்டுமே, புகார்கள் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பெரும் பாலானோர், அடிப்படை தேவை களுக்காக, மாநகராட்சி அலுவலகங் களுக்கு தினமும் அலைந்தபடி இருக்கின்றனர்.அவர்களுக்கு, நம்ம சென்னை மொபைல் ஆப் குறித்த விழிப்புணர்வு இல்லை. புகார்கள் பெறும் அதிகாரிகளும் தெரிவிப்பதில்லை.
இதனால், 12 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ள மாநகராட்சியில், 47 ஆயிரத்து, 478 பேர் மட்டுமே, மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்துஉள்ளனர்.அதில், 16 ஆயிரத்து, 744 பேர் மட்டுமே புகார்கள் தெரிவித்துள்ளனர். 16 ஆயிரத்து, 495 புகார்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. 249 புகார்கள் மட்டுமே, தீர்வு காணப்படாமல் உள்ளது. மொபைல் ஆப் குறித்து, பொதுமக்களிடம், மாநகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Label