OUR CLIENTS
கோழிக்கு கண் ஆப்பரேஷன்!
கோழிக்கு கண் ஆப்பரேஷன்! Posted on 17-Dec-2018 கோழிக்கு கண் ஆப்பரேஷன்!

திண்டுக்கல், டிச.17-

திண்டுக்கல்லில் அறுவை சிகிச்சை மூலம் கோழியின் கண்ணில் இருந்த கட்டி அகற்றப்பட்டது.
திண்டுக்கல், சீலப்பாடி முத்தையா நகரைச் சேர்ந்த பள்ளி மாணவி கோகுல சாந்தபிரியா(17). இவர் நாட்டுக்கோழி வளர்த்து வருகிறார். சில நாட்களுக்கு முன் கோழியின் நடையில் தடுமாற்றம் ஏற்பட்டது. கண்ணில் நீர் வழிந்தது. ஆசையாய் வளர்த்த கோழிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தாங்க முடியாத மாணவி கவலை அடைந்தார்.
பெற்றோரின் உதவியுடன், ஆர்.எம். காலனியில் உள்ள ஒரு கால்நடை மருத்துவரிடம் கோழியை காட்டினார். அவர் கோழியின் கண்ணில் கட்டி வந்து இருப்பதாகவும் ஆப்பரேஷன் மூலமே அகற்ற முடியும் என்றும் கூறினார். மனிதர்களைப் போல கோழிக்கும் மயக்க மருந்து கொடுத்து கால்நடை மருத்துவர் வெங்கடேசன் ஆப்பரேஷன் செய்து கட்டியை அகற்றினார். அதன் பிறகே மாணவியின் முகத்தில் மகிழ்ச்சி வந்தது.

Label