OUR CLIENTS
எருது விடும் விழா!
எருது விடும் விழா! Posted on 17-Dec-2018 எருது விடும் விழா!

திருவண்ணாமலை, டிச.17-

மார்கழி மாதத்தையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான எருது விடும் விழா வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் அடுத்த வீரவளுர் பகுதியில் தமிழர்களின் பாரம்பரியமிக்க எருது விடும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. சுற்று வட்டார கிராம மக்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். புதுப்பாளையம் அடுத்துள்ள வீரவளுர் மேல் சோழங்குப்பம் பாளுர் காரப்பட்டு ஆகிய பகுதிகளில் மார்கழி மாத ஊற்ச்சவத்தையெட்டி தமிழர்களின் பாரம்பரியமான மஞ்சுவிரட்டு மற்றும் எருது விடும் போட்டி நடத்தப்பட்டது இதில் சுமார் பத்து மாவட்டங்களிலிருந்து ஐநூறுக்கும் மேற்ப்பட்ட காளை மாடுகள் கலந்து கொண்டன வாடிவாசலில் அவிழ்த்து விடும் காளைகளை எருது பிடி இளைஞர்கள் ஆர்வத்துடன் பிடிக்க முயன்றனர். 
தமிழர்களின் பாரம்பரியமிக்க எருது விடும் விழாவினை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து சுமார் ஐந்தாயிரத் திற்க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர் எருது பிடி நிகழ்வின் போது சுமார் பத்துக்கும் மேற்ப்ட்டோருக்கு லேசான காயம் அடைந்து அருகில் உள்ள ஆரம்பசுகாதார நிலையங்களில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர். போட்டியில் குறிப்பிட்ட பந்தைய தூரத்தை குறைவான வினாடிகளில் கடந்து வெற்றி பெற்ற காளை களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Label