OUR CLIENTS
இலவச பொது மருத்துவ முகாம்!
இலவச பொது மருத்துவ முகாம்! Posted on 17-Dec-2018 இலவச பொது மருத்துவ முகாம்!

வாணியம்பாடி  டிச.17-

வாணியம்பாடி அருகே தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற இலவச பொது மருத்துவ முகாமை  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி  அடுத்த இந்திரா நகர் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை சார்பில்  இலவச பொது மருத்துவ முகாம் ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில்  நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் முகாமை தொடங்கி வைத்து பேசுகையில்:  மக்களுக்கு தடையில்லாமல் மருத்துவ சேவை கிடைத்திடவும் , நோயற்ற வாழ்வை உறுதி செய்திடும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கொண்டு வந்தார். 
அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்கள் பயன்பெறும்  வகையில் உள்ளது என்பதை சிறுநீரக பாதிப்பு உள்ளாகியுள்ள நோயாளி வாரத்திற்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்து கொள்ளவேண்டும். இல்லை யென்றால் அவர்கள் இறக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.  ஒரு முறை டயாலிசிஸ் செய்வதற்கு ரூபாய் 3 ஆயிரம் செலவாகிறது. ஆனால் அந்த நிலமையை முன்னாள் முதல்வர் கொண்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறுநீரக நோயாளிகள் இலவசமாக டயாலிசிஸ் சிகிச்சை பயண்பெற்று வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் அண்மைக் காலமாக குழந்தை இறப்பு விகிதமும் கர்ப்பிணி பெண்களின் இறப்பு விகிதமும் குறைந்துள்ளதாக தெரிவித்த அவர் இதற்கு தமிழக அரசின் சுகாதாரத்துறை எடுத்துவரும் முயற்சியை காரணம் எனவும் கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமாக இருக்கவும் நலமுடன் பிரசவம் பார்த்து கொள்ள தமிழக அரசின் சார்பில் ரூபாய் 18,000 வழங்கப்பட்டு வருவதாக  குறிப்பிட்டு பேசினார் .பின்னர் வெஸ்ட் பெங்காலில் நடைபெற்ற தேசிய  அளவிலான வலைபந்து போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்று சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற அப்பகுதியை சேர்ந்த மாணவர்களை வாழ்த்தி பாராட்டினார். 
இதில் 867 பேர் கலந்து கொண்டு  கண்,காது,மூக்கு,எலும்பு இரத்த பரிசோதனை, கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன்வசதி உள்ளிட்ட பொது மருத்துவம் அளிக்கப்பட்டது. 14 பேர் மேல்சிகிச்சைக்காக சென்னை அனுப்பி வைக்க பட்டனர்.     நிகழ்ச்சியில் ,மருத்துவர்கள் ,செவிலியர்கள், மற்றும் வாணியம்பாடி நகர கழக செயலாளர் சதாசிவம், மாவட்ட பிரதிநிதி பிரகாசம், அருண், முன்னாள் நகரமன்ற துணை தலைவர் பாண்டியன், லிங்கநாதன் ,சதீஷ்குமார், , சதீஷ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர் மிருணாளினி நன்றியுரை நிகழ்த்தினார்.

Label