OUR CLIENTS
ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாட்டு சதி! பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்
ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாட்டு சதி! பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் Posted on 17-Dec-2018 ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாட்டு சதி! பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்

தூத்துக்குடி, டிச.17-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் வெளிநாட்டு சதி உள்ளதாக பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் பா.ஜ.க. தேர்தல் ஆலோசனைக்கூட்டம் பானுபிருந்தாவன் ஹோட்டலில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசுகையில், பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி மன்ற தேர்தல் உடபட அனைத்து தேர்தலையும் சந்திக்க தயாராக உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் தேர்தல் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர அதிமுக, திமுக என அனைவருமே பா.ஜ.க.,வுடன் தேர்தல் கூட்டணி வைத்தவர்கள் தான். பா.ஜ.க. ஆட்சியில் அமைச்சர்களாகவும் இருந்துள்ளார்கள். முன்பு வைகோ விஜயகாந்தை முதல்வராக்குவேன் என்றார். தற்போது ஸ்டாலினை முதல்வராக்குவேன் என்கிறார். திமுக கூட்டணியில் தொடரவேண்டும் என்பதற்காக பிரதமர் மோடியை வைகோ தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார். தமிழக அரசியல் கட்சியினரிடையே கொள்கையற்ற கூட்டணிதான் இருந்து வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்று சிறை சென்றவர் தற்போதைய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தான். ஆனால் தொழில் புரட்சி என்று ஆலைக்கு அடிக்கல் நாட்டியது அப்போதைய முதல்வர் கருனாநிதிதான். இரு திராவிட கட்சிகளும் மாறி, மாறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். தற்போது 20 ஆண்டுகளாக இயங்கும் தொழிற்சாலையை மூட வேண்டும் என்பது தவறானது. தாமிர தொழிற்சாலைகள் உலகம் முழுவதும் 140 இடங்களில் உள்ளது. இந்தியாவில் ராஜஸ்தான், ஜார்கண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. ஜெர்மன் நாட்டில் ஊருக்கு நடுவிலே தாமிர ஆலை இயங்கி வருகிறது.
தொடக்கத்தில் ஆதரித்தவர்கள் தற்போது எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. இந்த ஆலையை மூடிய பின்னர், வெளிநாடுகளில் இருந்து சுமார் 3லட்சம் டன் காப்பர் இறக்குமதி செய்யப்படுகிறது. வெளி நாட்டிற்கு ஏற்றுமதி என்ற நிலை மாறி, தற்போது இறக்குமதி ஆகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கேன்சர் என்ற பொய்யான தகவலையும் பரப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் கேன்சர் பாதிப்பில் சென்னை முதலிடம் வகிக்கிறது. தூத்துக்குடியில் ஆன்கள் 14வது இடத்திலும், பெண்கள் 24வது இடத்திலும் இருந்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹவாலா மோசடிக்காரர்கள், பினாமி தொழிலதிபர்கள் ஆகியோரை கட்டுப்படுத்தவே பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பா.ஜ.க.அரசு எடுத்தது. அந்த மோசடிக்காரர்களுடனும், நக்சலைட்டுகளுடன் கைகோர்த்து காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றி வருகிறது. தேர்தல் தோல்விக்கும் இது தான் காரணம்.  பா.ஜ.கட்சி ஓட்டு அரசியல் நடத்தவில்லை. நாட்டு நலனுக்காகவும், மக்கள் நலனுக்காக‌வும் ஆட்சி செய்து வருகிறது என்றார். பேட்டியின் போது மாவட்ட தலைவர் பாலாஜி, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் பிரபு, தேசியக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சந்தன‌க்குமார், மண்டல தலைவர் செந்தில் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Label