OUR CLIENTS
கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம்!
கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம்! Posted on 17-Dec-2018 கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

வேலூர், டிச.17-

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் வாகன நெரிசலைக் குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் மாநகரின் மையப் பகுதியாக விளங்கும் கிரீன் சர்க்கிளில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் அறிவுறுத் தலின் அடிப்படையில் இரு நாள்களுக்கு வாகன வழித்தடங்களை மாற்றி சோதனை ஓட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அப்பகுதியில் சோதனை அடிப் படையில் வெள்ளிக்கிழமை முதல் வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையிலிருந்து வரும் பேருந்து, கார், ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் மட்டும் அணுகுச் சாலையில் செல்லும் வகையில் அனுமதிக்கப்படுகின்றன. அதேசமயம், அனைத்து வகையான சரக்கு வாகனங்கள் அணுகுச் சாலையில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்து, கார், இருசக்கர வாகனங்கள் வழக்கமாக கிரீன் சர்க்கிள் வழியாக செல்ல அனுமதிக்கப்படுகின்றன.
இதேபோல், வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும், காட்பாடி செல்லும் பின்புற சாலையை நுழைவு பகுதியாகவும், செல்லியம்மன் கோயில் அருகே நுழைவுப் பகுதியை பேருந்துகள் வெளியேறவும் அனுமதிக்கப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்து பிரிவு போலீஸார் கூறியது: வேலூர் மாநகராட்சி பகுதியில் காலை 8 முதல் 10 மணி வரை சரக்கு, கனரக வாகனங்கள் பாகாயம், தொரப்பாடி, காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சத்துவாச்சாரி ஆகிய பகுதிகளுக்கு வெளியே நிறுத்த வேண்டும். அந்த நேரத்தில் மாநகரப் பகுதியில் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதை நிரந்தரமாக்குவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றனர்.

Label