OUR CLIENTS
உலக சாம்பியன் பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை
உலக சாம்பியன் பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை Posted on 17-Dec-2018 உலக சாம்பியன் பட்டம் வென்று பி.வி.சிந்து சாதனை

பெய்ஜிங், டிச.17-

'உலக சாம்பியன் பட்டம்' வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்றை பி.வி.சிந்து படைத்தார்.
உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற  பெண்கள் ஒற்றையர் இறுதியில் தரவரிசையில் 6-து இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை பி.வி.சிந்து,  முன்னாள் உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.  அரையிறுதிப் போட்டியில் வென்றதும் பிவி சிந்து பேசுகையில், இந்த சீசனை தங்கப்பதக்கத்துடன் நிறைவு செய்ய முடியும் என்று நம்புகிறேன். கடந்த 4 ஆட்டங்களில் விளையாடியது போல் இறுதிப்போட்டியிலும் நன்றாக செயல்படுவேன்' என்றார். 
 "இறுதிப்போட்டியில் தோல்வியடைவேன் என்று கூறமாட்டேன், கட்டாயம் வெள்ளிப்பதக்கம் வெல்வேன் என்றுதான் கூறுவேன். என்னுடைய விளையாட்டில் நான் மகிழ்ச்சியடைகிறேன். விளையாட்டிலும், வாழ்க்கையிலும் வெற்றியும், தோல்வியும் ஒரு அங்கம்,"என்று கூறினார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்றைய இறுதி ஆட்டம் தொடங்கியது.  ஆட்டம் தொடங்கியதுமே பிவி சிந்து ஆதிக்கம் செலுத்த தொடங்கினார். மின்னல் வேகம், எதிராளியின் தவறை புள்ளியாக்குவதில் கவனம்  என மிகவும் நேர்த்தியான ஆட்டத்தை பம்பரம் போல் சுழன்று  வெளிப்படுத்தினார். 7- என்ற காணக்கில் ஆட்டத்தை தன்னுடைய வசமே வைத்து விளையாடினார் சிந்து. ஜப்பான் வீராங்களையும் ஆட்டத்தை எளிதாக விட்டுவிடவில்லை. அபாராமாக எதிர்க் கொண்டார் ஒகுஹரா. அடுத்தடுத்த புள்ளிகளைப் தனதாக்கி 5- என்றானது. சிந்துவும் அபாரம் காட்டினார். 14-6 என்று முன்னிலைப் பெற்ற சிந்துவிற்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக விளையாடிய ஒகுஹரா 16-6 என்ற சரிசமான நிலையை எட்டினார். இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. ஒகுஹரா செய்த தவறுகளை தனக்கு புள்ளியாக்கிய சிந்து ஆட்டத்தை மீண்டும் தன்வசம் கொண்டுவந்து, விரைவில் செட்டை தன்வசப்படுத்தினார். 21-9 என்ற கணக்கில் சிந்து முதல் செட்டை வென்றார். 
கடும் சரிவிலிருந்து மீண்ட ஒகுஹரா இரண்டாவது செட்டில் மேலும் நெருக்கடியை கொடுத்தார்.  இறுப்பினும் இந்த செட்டையும் நானே கைப்பற்றுவேன் என்ற நம்பிக்கையுடன் விளையாடிய சிந்து போட்டியை தன்வசமாகவே வைத்தார். இரண்டாவது செட்டையும் 21-7 என்ற கணக்கில் தன்வசப்படுத்திய பிவி சிந்து 'உலக சாம்பியன் பட்டம்' வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்தார். 
2017 இறுதிப்போட்டியில்  ஒகுஹராவிடம் அடைந்த தோல்விக்கு இந்த முறை சிந்து பழிதீர்த்துக்கொண்டார். பிவி சிந்துவின் 14 வது சாம்பியன் பட்டம் இதுவாகும். இவ்வாண்டின் முதல் சாம்பியன் பட்டம். உலக சாம்பியன்ஷிப், ஆசிய விளையாட்டு போட்டிகள், காமன்வெல்த் போட்டிகள், தாய்லாந்து ஓபன் மற்றும் இந்திய ஓபனில் அவருடைய ஆட்டம் வெள்ளியுடன் நின்றது. ஆண்டு இறுதியில் தங்கத்தை தன்வசப்படுத்தினார்.  உலக பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேக்வால் கடந்த 2011- ஆண்டு இறுதிப்போட்டி வரையில் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Label