OUR CLIENTS
அரசியலமைப்பு சட்டத்தை மீறும் மோடி மேகதாது நோக்கி 1-தேதி விவசாயிகள் பேரணி! பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு
அரசியலமைப்பு சட்டத்தை மீறும் மோடி மேகதாது நோக்கி 1-தேதி விவசாயிகள் பேரணி! பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு Posted on 17-Dec-2018 அரசியலமைப்பு சட்டத்தை மீறும் மோடி மேகதாது நோக்கி 1-தேதி விவசாயிகள் பேரணி! பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

திருச்சி, டிச.17-

தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு வரைவு திட்டம் மற்றும் ஆய்வு திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு மத்திய அரசு கொடுத்த அனுமதியை திரும்ப பெற வேண்டும்.

கர்நாடகா முதல்வர் சட்டத்துக்கு புறம்பாக மேகதாது அணை கட்டி தமிழகத்திற்குதான் தண்ணீர் தரப்போகிறோம் என்றும், அதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கூறுவது மிக மோசடியானது. தமிழகத்தை அழிக்கும் நோக்கம் கொண்டது.
எனவே உள்நோக்கத்துடன் மேகதாது அணை கட்டுவதை கர்நாடகா அரசு கைவிட வேண்டும். தமிழக விவசாயிகள் நலனில் அக்கறை இருந்தால் கர்நாடகா முதல்வர் ராசி மணலில் அணை கட்டி, கடலில் கலக்கும் தண்ணீரை தமிழகம் பயன்படுத்த அவர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மத்திய அரசு ராசி மணலில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.
மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். அதே நேரம் வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்துள்ள அனுமதியை தடை செய்யமாட்டோம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் கூற்று முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. இதனால் கோர்ட்டு தீர்ப்பு மீது தமிழக விவசாயிகளுக்கு சந்தேகம் இருக்கிறது. இது இந்தியாவின் ஒற்றுமைக்கு பேராபத்தை ஏற்படுத்தும்.
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவில் லாப நோக்கத்துடனும் தமிழகத்தை அழிக்கும் நோக்கத்துடனும் மத்திய அரசு செயல்படுவது ஏற்கக்கூடியது இல்லை. பிரதமர் மோடி கர்நாடகாவில் ஓட்டு வாங்குவதற்காக மறைமுக சூழ்ச்சியில் ஈடுபடுகிறார். அரசியல் அமைப்பு சட்டத்தையே பிரதமர் மீறுகிறார்.
எனவே ஜனவரி1-தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து மேகதாது நோக்கி, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக செல்ல உள்ளோம். மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜனவரி 1-தேதியை துக்க நாளாக அறிவித்து தமிழகத்தில் விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், அரசு அதிகாரிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Label