OUR CLIENTS
இளம் மாணவிகளை ஆபாசமாக விமர்சிக்கும் பள்ளி ஆசிரியை!
இளம் மாணவிகளை ஆபாசமாக விமர்சிக்கும் பள்ளி ஆசிரியை! Posted on 19-Dec-2018 இளம் மாணவிகளை ஆபாசமாக விமர்சிக்கும் பள்ளி ஆசிரியை!

வேலூர், டிச.19-

வேலூரில் பள்ளி மாணவிகளை ஆபாசமாக விமர்சிக்கும் பள்ளி ஆசிரியை மீது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர். 
வேலூர் மாவட்டத்தில் மாணவர்கள் நன்றாக படிக்கவும், வாழ்க்கையில் முன்னேறவும் மாவட்ட கல்வித்துறை முனைப்போடு செயல்படுகிறது. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வித்துறை திறன் மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் பல்வேறு சிறப்பு பயிற்சிகளை செவ்வனே செய்து கொண்டு வருகிறது. ஆசிரியப் பெருமக்களும், மாணவச் செல்வங்களை வழிநடத்த பாடுபடுகிறார்கள். ஆனால் அரசும், அதிகாரிகளும் ஒழுக்கமும், நேர்மையும் உள்ள ஆசிரியர்கள் ஆகியோரது நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் வேலூர் சலவன்பேட்டை அரசு பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியை தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் தவறாக பேசி மாணவிகளின் ஒழுக்கத்தை வார்த்தைகளில் விரிவாக கூற முடியாதவாறு அவலட்சண வார்த்தைகளில் மாணவிகளை தினசரி புண்படுத்தியதால் மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
பள்ளியில், வகுப்பில்  மாணவிகளை வார்த்தைகளில் வன்கொடுமை செய்தது மட்டுமன்றி மாணவிகளின் வீட்டருகே உள்ள கடைகளுக்குச் சென்று மாணவிகள் ஒழுக்கம் குறித்து விமர்சித்துள்ளார் கடமை தவறாத அந்த ஆசிரியை என்றால் பார்த்து கொள்ளுங்கள். இவர் கடவுள் இல்லை என்னும் வழித்தோன்றலில் உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை கேள்விப்பட்ட அந்த மாணவியின் பெற்றோர் குறிப்பிட்ட பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியை பேசியது குறித்து நியாயம் கேட்டுள்ளனர். தான் தவறாக பேசியதை நியாயப்படுத்தி பேசிய அந்த ஆசிரியை பள்ளியிலிருந்த ஓய்வறைக்குள் சென்று அறையை பூட்டிக்கொண்டார். பின்னர் சக ஆசிரிய, ஆசிரியர்களின் அழைப்புக்கு பின் வெளியே வந்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். இளம் மாணவிகள் மனதில் நஞ்சை விதைக்கும் விதம் இந்த ஆசிரியைக்கு கை வந்த கலை என்கின்றனர் சக ஆசிரியைகள். தேவையில்லாத வம்புகளை விலைக்கு வாங்குவதே இவருக்கு வேலை என்றும் கதை கதையாக இந்தப்பகுதி வாழ் பொதுமக்கள் கூறி அங்கலாய்க்கின்றனர். 
பல பிரச்னைகளுக்கு இடையில் பிள்ளைகளை நிறுத்தாமல் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர் பெற்றோர்கள். ஆனால் அப்படி பள்ளி வரும் இளம் நெஞ்சில் இப்படி நஞ்சையும், அநாகரீகமான வார்ததைகளையும் உபயோகப்படுத்துவது தேவைதானா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. பாடம் கற்பித்தோமா, அவர்களை நல்வழியில் கொண்டு சென்றோமா என்றில்லாமல் தேவையில்லாத கதைகள் பேசி அவர்களை திசை திருப்பும் பணியில் இந்த ஆசிரியை ஈடுபடுகிறார். நல்ல பிள்ளைகளை உருவாக்கும் வேலையை விட்டு விட்டு இப்படி நல்ல பிள்ளைகளை தவறான வழியில் செல்ல இவர் வழிகாட்டும் பணியை இடைவிடாமல் செய்து வருகிறார். ஏன் இவருக்கு இப்படி மனநலம் மாறியது என்பது புரியாத புதிராக உள்ளது. கல்வித்துறை உளவியல் ரீதியாக இந்த ஆசிரியைக்கு மருத்துவம் அளிக்க முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 
தினசரி ஆபாச வார்த்தைகளால் அர்ச்சிக்கும் அந்த ஆசிரியை மாணவிகளிடம் அடிக்கடி உனது அப்பா, அம்மா வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைக்கமாட்டார்கள், நீயே யாரையாவது இழுத்துக்கொண்டு ஓடுவாய் என சர்வ சாதாரணமாகச் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்கிறார்கள். மாணவச் செல்வங்களுக்கு நன்னெறி போதிக்கவேண்டிய ஒரு ஆசிரியை தன் மகள்களைப் போல் நேசிக்கவேண்டிய, பாவிக்க வேண்டிய இளம் மாணவிகளை ஒழுக்கக்கேடான வார்த்தைகளை கூறி பிரயோகிப்பது எந்தவகையில் நியாயம் என்பது அவருக்கே வெளிச்சம்.
முதலில் இதுபோன்ற ஆசிரியைகளுக்கு ஒழுக்கம், நெறி குறித்து போதிக்க வேண்டும். நல்ல மனநிலையில் உள்ள ஒருவர் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள் என கூறி மாணவிகளின் பெற்றோர்கள் புலம்புகின்றனர். மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்களும், பெற்றோர்களும் நம்புகின்றனர். பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரது நடவடிக்கைகள் மட்டுமல்லாது மாவட்ட நிர்வாகம் இந்த ஆசிரியை மீது என்னதான் நடவடிக்கை எடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label