OUR CLIENTS
பத்திரப்பதிவு பணிகள் முடக்கம் மக்கள் பரிதவிப்பு!
பத்திரப்பதிவு பணிகள் முடக்கம் மக்கள் பரிதவிப்பு! Posted on 19-Dec-2018 பத்திரப்பதிவு பணிகள் முடக்கம் மக்கள் பரிதவிப்பு!

சென்னை, டிச.19-

ஆன்லைன் முறையிலான பத்திரப்பதிவில் கட்டணம் செலுத்தியவர் களுக்கு டோக்கன் எண் கிடைக்கா ததால் பதிவுக்காக சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தவர்கள் பாதிக்கப் பட்டனர்.
தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள் பிப்., 12ல் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டன.
அதைத் தொடர்ந்து திருமணம், சங்கம் உள்ளிட்ட இதர வகை பதிவு பணிகளும் டிச., 10 முதல் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டன. தொடக்க விழாவுக்கு பின் புதிய நடைமுறைகள் நேற்றுமுன்தினம் முதல் அமலுக்கு வந்தன.இந்த நடைமுறையில் பதிவுக்கு வருவோர் அடிப்படை கட்டணமான 150 ரூபாயை இ -பேமென்ட் முறையில் செலுத்தினால் தான் டோக்கன் எண் ஒதுக்கப்படும். இதன்படி நேற்றுமுன்தினம் கட்டணம் செலுத்தியவர்களுக்கு டோக்கன் எண் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு பத்திர எழுத்தர்கள் சங்க நிர்வாகி கண்ணன் கூறியதாவது: ஆன்லைன் முறையில் அடிப்படை கட்டணத்தை செலுத்திய பின் அடுத்த நிலைக்கு செல்லாமல் கணினி திரை முடங்கி விடுகிறது. இதில் மீண்டும் மீண்டும் கட்டணம் செலுத்தினாலும் டோக்கன் எண் கிடைக்காததால் பதிவு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. மதுரை உட்பட பல்வேறு மண்டலங்களிலும் இதே போன்ற குறைபாடு ஏற்பட்டு உள்ளது. யாரோ சிலர் தவறு செய்தனர் என்பதற்காக அனைவரையும் தண்டிக்கும் வகையில் பதிவுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
அனைத்து இது குறித்து பதிவுத்துறை தலைவர் குமரகுருபரன் கூறியதாவது:முறையான பத்திரப் பதிவுக்கு வருவோருக்கு மட்டுமே டோக்கன் எண் ஒதுக்கப்பட வேண்டும். முறைகேடுகளை தடுக்க, இ - பேமென்ட் முறையில் கட்டணம் செலுத்திய பின் டோக்கன் எண் ஒதுக்கப்படும். இதற்காக வங்கிகளும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சில வங்கிகளின் கணக்கில் கட்டணம் செலுத்தியோருக்கு டோக்கன் எண் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த குறைபாடுகளை உடனடியாக சரி செய்து வருகிறோம். மக்கள் எவ்வித பிரச்னையும் இன்றி இத்திட்டத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பத்திரப் பதிவுத் துறையில் நேற்று ஆன்லைன் குளறுபடியால் பத்திரப்பதிவு ஸ்தம்பித்தது. இத்துறையில் புரோக்கர்களை தவிர்க்கவும் விண்ணப்பதாரர் நேரடியாக அணுகி தேவையானதை நிறைவேற்றிக் கொள்ளும் வகையிலும் ஸ்டார் 1முறை அமல் படுத்தப்பட்டது. இதன்படி அனைத்து பதிவுகளுக்கும் ஆன்லைன் மூலம் டோக்கன் பெற்று பதிவுகள் நடத்தப்பட்டன. ஆன்லைன் முறைக்கு பத்திர எழுத்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது ஸ்டார் 2-ஓ எனும் ஆன்லைன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டோக்கன் பெற கம்ப்யூட்டர் செலவு 100 ரூபாய் பதிவு தொடர்பாக சி.டி., வழங்க 50 ரூபாய் என 150 ரூபாய் செலுத்தி டோக்கன் பெற வேண்டும். நேற்றுமுன்தினம் மார்கழி பிறப்பு என்பதால் சொத்து பதிவுகள் குறைவாகவே இருந்தது. மற்ற பதிவுகள் வழக்கம் போல் இருந்தது. எனினும் ஆன்லைனில் டோக்கன் பெற முடியாமல் போனதால் பத்திரப்பதிவுத்துறை நேற்று முன்தினம் ஸ்தம்பித்தது. இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளாக பதிவுகளுக்கான சி.டி., வழங்கப்படவில்லை.
எனினும் தொடர்ந்து சி.டி., கட்டணம் 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.பத்திரப் பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி., நல்லசிவம் கூறியதாவது: நேற்றுமுன்தினம் 4,500 பதிவுகள் நடந்துள்ளன. டோக்கன் முறையை பயன்படுத்தி பத்திர எழுத்தர்கள் சிலர் 'டம்மி' டோக்கன் பெறுகின்றனர். ஒரு சார் பதிவாளர் அலுவலகத்தில் 60 டோக்கன் பெற்றனர். ஆனால் அன்றைய தினம் 13 பதிவுகள் மட்டுமே நடந்துள்ளன. டோக்கன்களை 1000 ரூபாய், 2000 ரூபாய் என விற்கின்றனர். அவர்களுக்கு வருமானம் குறைவதால் வதந்திகளை பரப்புகின்றனர். பதிவுகளுக்கான சி.டி.,க்களை வழங்க நிறுவனம் ஒன்றுக்கு டெண்டர் விட ஏற்பாடுகள் நடக்கிறது என்றார்.
தமிழ்நாடு பத்திர நகல் எழுதுவோர் சங்க பொதுச்செயலாளர் கண்ணன் கூறியதாவது: பத்திரம் பதிவு செய்ய சொத்து வாங்குபவர் விற்பவர் மற்றும் சாட்சிகளின் முழு விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதன்படி 'டி.பி.' (டெம்பரவரி போர்ட்டல்) எண் வழங்கப்படும். எனவே ஒருவரின் பெயரில் உள்ள டோக்கனை மற்றொருவருக்கு பதிவு செய்ய இயலாது. கூடுதல் ஐ.ஜி., பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் என்றார்.

Label