OUR CLIENTS
வேன்-மோட்டார் பைக் மோதல்! 2 இளைஞர்கள் பரிதாப பலி!
வேன்-மோட்டார் பைக் மோதல்! 2 இளைஞர்கள் பரிதாப பலி! Posted on 19-Dec-2018 வேன்-மோட்டார் பைக் மோதல்! 2 இளைஞர்கள் பரிதாப பலி!

செங்கம், டிச.19-

செங்கம் பகுதியில் நடந்த சாலை விபத்தில் மோட்டார் பைக்கில் சென்ற இளைஞர்கள் 2 பேர் வேன் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அரசங்கண்னி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் மீது வேன் மோதியதில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 
திருவண்ணாமலையில் இருந்து திருப்பூருக்கு மோட்டார் பைக்கில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ராம்விக்னேஷ்வர் (21)மற்றும் அவரது நண்பர் நவீன் (21) சென்று கொண்டிருந்தனர்.அரசங்கண்னி அருகே சென்ற போது ஊத்தங்கரையிலிருந்து செங்கம் நோக்கி வந்த வேன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராம்விக்னேஷ்வர் மற்றும் நவீன் ஆகிய இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்கள் உடலைக் கைப்பற்றி மேல்செங்கம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துதனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Label