OUR CLIENTS
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவரானார் ராஜபக்சே
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவரானார் ராஜபக்சே Posted on 19-Dec-2018 இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவரானார் ராஜபக்சே

கொழும்பு, டிச.19-

இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் பிரதமராக இருந்த ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பல எதிர்பாராத திருப்பங்களுக்கு காரணமாக அமைந்தது. கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை நீக்கிவிட்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக சிறிசேனா நியமித்ததற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சே நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற தொடரின்  போது சபாநாயகர் கரு ஜெயசூரிய இதை அறிவித்தார்.
ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக உறுப்பினர் கொண்ட கட்சியின் உறுப்பினருக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்படும். அந்த அடிப்படையில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான மகிந்த ராஜபக்சே எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதற்கு  ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

Label