OUR CLIENTS
மாவட்ட செயலாளரை கழற்றி விட்டு ஆட்டம் போடும் செந்தில் பாலாஜி!
மாவட்ட செயலாளரை கழற்றி விட்டு ஆட்டம் போடும் செந்தில் பாலாஜி! Posted on 20-Dec-2018 மாவட்ட செயலாளரை கழற்றி விட்டு ஆட்டம் போடும் செந்தில் பாலாஜி!

கரூர், டிச.20-
மாவட்ட செயலாளரை கழற்றி விட்டு விட்டு ஆட்டம் போடும் பணியில் செந்தில் பாலாஜி ஈடுபட்டு வருகிறார். இதனால் திமுவில் உள்ள உடன்பிறப்புகள் கொதிப்படைந்து காணப்படுகின்றனர்.
தி.மு.க.,வில் இணைந்த மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்டச் செயலாளரை கழற்றி விட்டு விட்டு தனியாகச் சென்று தி.மு.க., நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். கொங்கு மண்டலத்தில் வலுவான நிர்வாகிகள் இல்லாமல் தி.மு.க., தடுமாறி வருகிறது. அதுவும் கரூர் மாவட்டத்தில் திறமையான நிர்வாகிகள் இன்றி தவிப்பதால் இழுக்கப்பட்டவர்தான் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் அ.ம.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்துள்ளார். இந்நிலையில் 18ம் தேதி முதல், கரூர் நகரம், பேரூராட்சி, ஒன்றிய நிர்வாகிகளை செந்தில் பாலாஜி சந்தித்து வருகிறார். 
ஆனால் தன்னுடன் மாவட்டச் செயலாளர் ராஜேந்திரனை அழைத்துச் செல்லவில்லை. இதுகுறித்து தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: :எங்கள் கட்சியில் மாவட்டச் செயலாளர் பதவி பலம் வாய்ந்தது. அவர் இல்லாமல் எந்த நிகழ்ச்சியையும் நடத்த முடியாது. ராஜேந்திரன் செயல்பாடுகளால் கட்சி தேயத் தொடங்கியதால் அவரை மாற்ற வேண்டும் என தலைமை முடிவு செய்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் வருகை ஸ்டாலினுக்கு பெரிய நம்பிக்கையை தந்தது. தலைமையின் உத்தரவுப்படி கொங்கு மண்டலம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வேலையை செந்தில் பாலாஜி தொடங்கி விட்டார். அதனால்தான் கரூர் மாவட்டத்துக்கு அப்பாற்பட்டு கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட பிற மாவட்டங்களில் உள்ள முக்கிய நிர்வாகிகளையும் கவுண்டர் சமூக பிரபலங்களையும் சந்தித்து வருகிறார். மாற்றுக் கட்சியில் இருந்து முக்கியமானவர்கள் வந்து இணைந்தால் மாவட்டச் செயலாளர் தலைமையில் அறிமுக நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற நடைமுறையை செந்தில் பாலாஜி மாற்றி உள்ளார். ராஜேந்திரனை ஓரங்கட்டி விட்டு மாவட்டம் முழுவதும் தனித்தே சென்று கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எது எப்படியோ திமுகவில் ஆல்ரவுண்டர் களம் இறங்கியுள்ளதால் திமுகவில் உள்ள பழைய பெருச்சாளிகள் ஆட்டம் காண தொடங்கிவிட்டனர். ஒருவேளை செந்தில் பாலாஜிக்கு மாவட்ட செயலாளர் பதவி ஏதாவது வழங்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் வேகமாகச் செயல்படும் செந்தில் பாலாஜியின் வேகம் திமுவினருக்கு புது ரத்தம் பாய்ச்சியது போன்று உணர்கின்றனர் திமுக நிர்வாகிகள். செந்தில் பாலாஜியின் வருகையால் கரூர் மாவட்ட அதிமுகவினர் அலறி போய் குளிர் ஜூரம் வரத் தொடங்கியுள்ளது என்று கூறப்படுகிறது. நல்ல ஒரு செயல்வீரரை அதிமுக இழந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் என்று அதிமுகவில் உள்ள சில ரத்தத்தின் ரத்தங்கள் புலம்ப தொடங்கி விட்டனர். செந்தில் பாலாஜி செயல்மறவர், கொண்டு வா என்றால் வெட்டி கொண்டு வருபவர் என்று கூறப்படுகிறது. அவரது இழப்பு ஈடு கட்ட முடியாத பேரிழப்பு என்று சமூக ஆர்வலர்களும், அதிமுகவில் உள்ள சில ரத்தத்தின் ரத்தங்களும் தெரிவித்துள்ளனர். அவரது வேகத்தை பார்த்து அதிமுகவினர் மிரள ஆரம்பித்து விட்டனர். 
இந்த வேகமாக செயல்பாடு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் வெளிப்படும் என்று அரசியல் நோக்கர்களும், அரசியல் வட்டாரங்களும், சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆக மொத்தம் சரிந்த திமுக கோட்டையை செந்தில் பாலாஜி தூக்கி நிறுத்த ஆரம்பித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கரூர் மாவட்டத்தில் செந்தில் பாலாஜி திமுகவில் ஒரு ரவுண்ட் வருவார் என்று அவரது அதிரடி ஆக்ஷன் சொல்லாமல் சொல்ல ஆரம்பித்து விட்டது என்றே கூறலாம்.

Label