OUR CLIENTS
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் அதிரடி கைது!
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் அதிரடி கைது! Posted on 20-Dec-2018 விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் அதிரடி கைது!

வாணியம்பாடி, டிச.20-

வாணியம்பாடி அருகே பணியில் சேர்ந்து சுமார் ஒன்றரை மாதமே ஆன நில அளவையர் வீடு கட்ட நில அளவை மேற்கொள்ள விவசாயிடம் ரூ.9 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் , வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் வட்ட நிலஅளவையர்  அசோகன். வாணியம்பாடியில் இவர் பணியில் சேர்ந்து சுமார் ஒன்றரை மாதமே ஆகிறது. இந்நிலையில்ஆலங்காயம் அடுத்த கொத்தகொட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன் என்பவர் தான் வீடுகட்ட போவதாகவும் தெரிவித்துள்ளார். ஆகவே தன்னுடைய நிலத்தை அளவீடு செய்ய வேண்டும் என்று நில அளவையர் அசோகனை சந்தித்து மனு அளித்துள்ளார். இந்நிலையில் நில அளவையர் விவசாயியிடம் நிலத்தை அளக்க காலதாமதம் செய்துள்ளார்.
மேலும் விவசாயி நில அளவையர் அசோகனிடம் தொடர்ந்து கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு நில அளவையர் அசோகன் நிலத்தை அளக்க ரூ.9 ஆயிரத்தை லஞ்சமாக கேட்டுள்ளார்.அதற்கு விவசாயி பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ராசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை  லஞ்ச ஒழிப்பு போலீசார் விவசாயிடம் கொடுத்து அனுப்பினர். அந்த பணத்தை பெற்றுக் கொள்ள  நில அளவையர் அசோகன் தான் தங்கியிருந்த நியூடவுன் பகுதியில் உள்ள தாஜ் விடுதிக்கு  கோபாலகிருஷ்ணனை வரவழைத்து அங்கு அந்த பணத்தை பெற்றுக் கொண்டார். அப்போது அங்கு மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளர்கள் விஜய் மற்றும் விஜயலட்சுமி தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நில அளவையர் அசோகனை சுற்றி வளைத்து பணத்தை பெற்றபோது கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் இவர் பணியில் சேர்ந்து ஒன்றரை மாத்தில் நிலம் அளக்க வரும் மனுக்களை பெற்றுக் கொண்டு காலதாமதம் செய்து வருவதாகவும், மேலும் லஞ்ச பணம் கொடுத்தால் மட்டும் உடனடியாக மனு மீது நடவடிக்கை எடுப்பதாகவும் பல்வேறு புகார்கள் இவர் மீது உள்ளதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அசோகன் வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறையில்  காவலில் அடைக்கப்பட்டார்.

Label