OUR CLIENTS
கலவரத்தை தூண்டும் வகையில் நோட்டீஸ்! நக்சல் அமைப்பினர் மூவர் கைது!
கலவரத்தை தூண்டும் வகையில் நோட்டீஸ்! நக்சல் அமைப்பினர் மூவர் கைது! Posted on 20-Dec-2018 கலவரத்தை தூண்டும் வகையில் நோட்டீஸ்! நக்சல் அமைப்பினர் மூவர் கைது!

தூத்துக்குடி, டிச.20-

தூத்துக்குடி மாவட்டத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் நோட்டீஸ் விநியோகம் செய்த நக்சல் அமைப்பை சார்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கடந்த 22 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது ஸ்டெர்லைட் காப்பர்  நிறுவனம். இந்த நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விரிவாக்கத்தை மேற்கொள்ள ªதொடங்கியது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திவருகிறது என்ற அச்சத்தின் அடிப்படையில் இந்த ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதிக்கக்கூடாது என  பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது சில விரும்பதகாத வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து தமிழக அரசு எந்தவித அறிவிப்புமின்றி ஆலையை மூடி சீல் வைத்தது. பின்னர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஆலை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 
வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை மூடியது தவறு. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளது. இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகள் ஆங்காங்கே பொதுமக்களிடம் போராட்டத்தை தூண்டி விடுகின்றன. 
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மாவட்டத்தில் அமைதியான சூழ்நிலை தொடர்ந்து நிலவ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் போராட்ட உணர்வை தூண்டும் வகையில் சிலர்  துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் பெயர் கடலூர் மாவட்டம், தேனம்பாக்கம், மூர்த்திகுப்பம் பகுதியைச் சார்ந்த ரத்தினவேலு என்பவரது மகன் நடராஜன்(29), கோவில்பட்டி புதுக்கிராமம்,வசந்தம் நகர் பகுதியை சார்ந்த போத்திராஜ் மகன் சந்தனக்குமார்(48), திருநெல்வேலி மாவட்டம் காந்திநகர், தென்காசி மெயின் ரோடு சார்ந்த மகதோம் மகன் கலலீல்ரகுமான்(48) என தெரியவந்துள்ளது. விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நக்சல் அமைப்புடன் தொடர்புடைய மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்தவர்கள் என தெரிகிறது. இது குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Label