OUR CLIENTS
பம்ப் ஸ்டாக்ஸ் கருவிக்கு தடை துப்பாக்கி கலாச்சாரத்தை குறைக்க அமெரிக்கா திட்டம் அதிபர் ட்ரம்ப் அதிரடி முடிவு
பம்ப் ஸ்டாக்ஸ் கருவிக்கு தடை துப்பாக்கி கலாச்சாரத்தை குறைக்க அமெரிக்கா திட்டம் அதிபர் ட்ரம்ப் அதிரடி முடிவு Posted on 20-Dec-2018 பம்ப் ஸ்டாக்ஸ் கருவிக்கு தடை துப்பாக்கி கலாச்சாரத்தை குறைக்க அமெரிக்கா திட்டம் அதிபர் ட்ரம்ப் அதிரடி முடிவு

வாஷிங்டன், டிச.20-
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்டும் விதமாக எந்திர துப்பாக்கிகளுக்கு தடை விதித்து ட்ரம்ப் அரசு உத்தரவிட்டுள்ளது. 
அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிசூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பள்ளி மாணவர்கள் கூட துப்பாக்கிகளை கொண்டு சென்று சக மாணவர்கள், ஆசிரியர்களை சுட்டுக்கொள்ளும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து துப்பாக்கி பயன்பாட்டை கட்டுப்படுத்த வலியுறுத்தி எதிர்ப்பு குரல்கள் எழுந்து வருகிறது. 
இதனால் துப்பாக்கி வைத்திருப்பவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ள ட்ரம்ப் நிர்வாகம் சற்று இறங்கி வந்துள்ளது. சாதாரண துப்பாக்கிகளை தானியங்கி துப்பாக்கிகளாக மாற்றும் 'பம்ப் ஸ்டாக்ஸ்' என்ற இணைப்பு சாதானத்திற்கு நேற்று முதல் அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த 'பம்ப் ஸ்டாக்ஸ்' கருவியை சாதாரண துப்பாக்கியில் பொருத்தினால் அதனை தானியங்கி எந்திர துப்பாக்கி போல பயன்படுத்த முடியும். அடுத்த 90 நாட்களுக்குள் பம்ப் ஸ்டாக்சை அழித்து விடவோ அல்லது அரசிடம் ஒப்படைக்கவோ அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Label