OUR CLIENTS
சாலையில் வாரச்சந்தை வாகன ஓட்டிகள் அவதி!
சாலையில் வாரச்சந்தை வாகன ஓட்டிகள் அவதி! Posted on 20-Dec-2018 சாலையில் வாரச்சந்தை வாகன ஓட்டிகள் அவதி!

விழுப்புரம், டிச.20-

அத்தியூர் வாரச்சந்தை சாலையிலேயே நடைபெறுவதால் வாகன ஓட்டிகள் அவதிபட்டு வருகின்றனர்.
ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய் கிழமை வாரச்சந்தை நடைபெறுகிறது. இதில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வியாபாரம் அதிகளவில் இருக்கும். ஆடு விற்பனைக்கு அதிகளவு முக்கியத்துவம் அளிக்கும் இந்த சந்தையில் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த வியாபாரிகளும், பொதுமக்களும் கலந்து கொள்வர்.ஆடுகளை ஏற்றி வரும் வியாபாரிகள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு, விற்பனை செய்து வருகின்றனர். 
வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருப்பதால் சாலை முழுவதும் நிற்கின்றனர். இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் உட்பட அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலை யோரமாக நடைபெறும் கால் நடைகள் விற்பனையை தடுத்து, போக்குவரத்தை சீரமைத்திட பகண்டை கூட்ரோடு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Label