OUR CLIENTS
போலிச் சான்று அளித்து பணியில் சேர்ந்த நூலகர் பணியிடைநீக்கம்!
போலிச் சான்று அளித்து பணியில் சேர்ந்த நூலகர் பணியிடைநீக்கம்! Posted on 20-Dec-2018 போலிச் சான்று அளித்து பணியில் சேர்ந்த நூலகர் பணியிடைநீக்கம்!

வேலூர், டிச.20-

பிளஸ் 2 போலிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த நூலகர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டத்தில் நகர்புற நூலகஙகள், ஊர்புற நூலகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் நூலகர்களாக பணியாற்றுவோருக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்காக அவர்களின் கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை ஆய்வு செய்யப்பட்டது. 
அப்போது, வாலாஜாபேட்டை வட்டம், அனந்தலை நூலகத்தில் நூலகராகப் பணியாற்றும் மேல்அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் (47), பணியில் சேர்ந்த போது அளித்திருந்த பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் போலியானது என்பது தெரியவந்தது. இதை அரசுத் தேர்வுகள் இயக்ககம் உறுதி செய்தது. 
இதையடுத்து லோகநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட நூலகர் ஆனந்தன் புகார் கொடுத்தார். இதையடுத்து லோகநாதனை பணியிடை நீக்கம் செய்து ஆனந்தன் உத்தரவிட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Label